உத்தரகாண்ட் மாநிலத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஹெலிகாப்டர் ஒன்று சாலையில் அவசரம், அவசரமாக தரையிறக்கப்பட்டது.

அங்குள்ள குப்த்காஷி என்ற இடத்தில் இருந்து 5 பயணிகளுடன் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டது. பறக்கத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஹெலிகாப்டரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. அந்த சிக்கலை சரி செய்ய விமானி முயன்றபோதும் அது பலனளிக்கவில்லை.

மீண்டும் விமான நிலையத்திற்கு திரும்புவதற்குள் அசம்பாவிதம் நேரிடும் என்பதை உணர்ந்த விமானி, சமயோசிதமாக செயல்பட்டு மாநில நெடுஞ்சாலை ஒன்றில் ஹெலிகாப்டரை தரையிறக்கினார். சாலையின் குறுக்கே ஹெலிகாப்டர் ஒன்று தரையிறங்குவதைக் கண்ட பொதுமக்கள் அச்சத்துடனும், ஆச்சர்யத்துடனும் அதனை பார்த்தனர்.

நட்டநடு சாலையில் ஹெலிகாப்டரை தரையிறக்க முயன்றபோது விமானிக்கு சிறிது காயம் ஏற்பட்டது. அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் நற்செயலாக பயணிகள் 5 பேருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

உடனடியாக விரைந்து வந்த போலீசார் ஹெலிகாப்டரை வல்லுநர்கள் உதவியுடன் சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர். இதனால் சிறிது நேரம் போக்கவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Share.
Leave A Reply

Exit mobile version