இந்திய அணிக்கு எதிராக அதிவேக சதம் அடித்த 2வது வீரர் என்ற புதிய சாதனையை ஆப்கானிஸ்தான் வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் படைத்துள்ளார்.

இந்தியா- ஆப்கானிஸ்தான் இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரம்சாலாவில் இன்று (ஜூன் 13) நடைபெறுகிறது. மழை காரணமாக தாமதமாக தொடங்கிய போட்டி 25 ஓவர்களாக குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர் இப்ராஹிம் ஸத்ரான் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். செதிக்குல்லா ரன்கள் எதுவும் எடுக்காமலும், ரஹ்மத் ஷா 3 ரன்களிலும் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தனர்.  இதனால், 26 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து ஆப்கானிஸ்தான் அணி தடுமாறியது.

இந்தநிலையில், ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் கேப்டன் ஹஸ்மதுல்லா ஷகிரி ஆகியோர் சிறப்பாக ஆடி நம்பிக்கை அளித்தனர். அதிரடியாக ஆடிய குர்பாஸ் 48 பந்துகளில் சதமடித்து அசத்தினார். இதன் மூலம் இந்திய அணிக்கு எதிராக குறைவான பந்துகளின் அதிவேக சதம் அடித்த 2வது வீரர் என்ற புதிய சாதனையை குர்பாஸ் படைத்தார்.

கடந்த 2005ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வீரர் ஷாகித் அஃப்ரிடி 45 பந்துகளில் சதமடித்தார்.  இந்தநிலையில், 48 பந்துகளில் சதமடித்து 2வது வீரர் என்ற புதிய சாதனையை ஆப்கானிஸ்தானின் ரஹ்மானுல்லா குர்பாஸ் படைத்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version