உலகக் கோப்பை கால்பந்து தொடரின் 26-வது லீக் சுற்று குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள ஸ்விட்சர்லாந்து மற்றும் போஸ்னியா அணிகளுக்கு இடையே லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது.

இந்த போட்டியில் தொடக்கம் முதலே இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தின. போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் பல வாய்ப்புகளை உருவாக்கினாலும், அவற்றை கோலாக மாற்ற முடியவில்லை. இதனால் முதல் பாதியில் இரு அணிகளும் எந்த கோலையும் அடிக்கவில்லை.

2வது பாதியில் ஆதிக்கம் செலுத்த தொடங்கிய ஸ்விட்சர்லாந்து அணி, ஆட்டத்தின் 74-வது நிமிடத்தில் ஜோஹன் மன்சாம்பி கோல் அடித்ஹு அணியை முன்னிலை பெற வைத்தார். அதனை தொடர்ந்து 84வது நிமிடத்தில் ரூபன் வர்காஸ் கோல் அடித்து ஸ்விட்சர்லாந்தை முன்னிலையிலேயே வைத்தார். அடுத்த 6வது நிமிடத்தில் மீண்டும் ஜோஹன் மன்சாம்பி மீண்டும் ஒரு கோல் அடித்தார்.

தொடர்ந்து தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்திய போஸ்னியா அணிக்கு எர்மின் மஹ்மிக் ஒரு கோல் அடித்து முன்னிலை வித்தியாசத்தை 3-1ஆக குறைத்தார். இருப்பினும் அணி மீண்டும் ஆட்டத்திற்குள் வர முடியவில்லை. ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை ஸ்விட்சர்லாந்தின் கிரானிட் ஷக்கா சிறப்பாக பயன்படுத்தி அணியின் கோலை 4 ஆக உயர்த்தினார்.

இறுதியில், ஆட்ட நேர முடிவில் சுவிட்சர்லாந்து அணி 4-1 என்ற கோல் கணக்கில் போஸ்னியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. முதல் போட்டியில் டிரா செய்திருந்த சுவிட்சர்லாந்து, இந்த வெற்றியின் மூலம் குரூப்-பி புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version