நேபாளில் நடைபெற்ற சர்வதேச சிலம்பப் போட்டியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 சிலம்ப வீரர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

சர்வதேச ஆசான் தற்காப்பு கலைக்கூடத்தின் சார்பில் ஏப்ரல் 24 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை  நேபாளில்  சர்வதேச சிலம்பப் போட்டி நடைபெற்றது. இதில் 15 நாடுகளைச் சேர்ந்த சிலம்ப விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.

இதில் சிங்கிள் ஸ்டிக், டபுள் ஸ்ட்ரீட், சுருள்வால் எனப் பல்வேறு பிரிவில் தங்களது திறமைகளை வெளிப்படுத்திய தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

இந்த வெற்றி, அவர்களின் கடின உழைப்பையும், பயிற்சியாளர்களின் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறது. மேலும், இந்த சாதனையின் மூலம் அவர்கள் விரைவில் நடைபெறவுள்ள ஆசிய அளவிலான சிலம்பப் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர்.

இந்த மாணவர்களின் வெற்றி தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளதாகவும், எதிர்கால போட்டிகளிலும் அவர்கள் மேலும் பல சாதனைகள் படைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version