19-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் மாதம் 28ம் தேதி தொடங்கி இன்றுடன் முடிவடைகிறது. 10 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் மற்றும் பிளே ஆப் சுற்றுகள் முடிந்து பெங்களூரு மற்றும் குஜராத் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன. இந்த நிலையில், இவ்விரு அணிகளில் யார் மகுடம் சூடப் போகிறார்? என்பதற்கான இறுதிப் போட்டி இன்று நடைபெறுகிறது.

நடப்பு சாம்பியனான பெங்களூரு அணி கடந்தாண்டை போலவே, இந்தாண்டும் கம்பீரமாக வெற்றி நடை போடுகிறது. லீக் சுற்றில் 9 வெற்றி, 5 தோல்வியுடன் புள்ளி பட்டியிலில் முதலிடம் பிடித்திருந்தது. முதலாவது தகுதிச் சுற்றி குஜராத் டைட்டன்ஸை 5வது முறையாக வீழ்த்தி இறுதிப் போடிக்கு முன்னேறியது.

2022ம் ஆண்டு சாம்பியனான குஜராத் அணி, லீக் சுற்றில் 9 வெற்றி 5 தோல்வியுடன் பெங்களூருவுடன் சமநிலை வகித்தாலும், ரன் ரேட்டில் பின் தங்கிய நிலையில் இருந்தது. அதனால் புள்ளிப் பட்டியலில் 2-வது இடத்தில் இருந்தது. முதலாவது தகுதி சுற்றில் பெங்களூருவுக்கு எதிராக 92 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய குஜராத் அணி, 2வது தகுதிச் சுற்றில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி 3-வது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

இந்த நிலையில், இவ்விரு அணிகள் மோதும் இறுதிப் போட்டியானது இன்று மாலை 7.30 மணிக்கு குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. சொந்த மண்ணில் குஜராத் அணி வெற்றி பெறுமா? அல்லது 18 ஆண்டுகளுக்கு பிறகு பெற்ற கோப்பையை இந்த முறையும் தன்வசப்படுத்துமா பெங்களூரு அணி? என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version