ஐபிஎல் 2026 சீசனுக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் புதிய ஜெர்சி, ஒரு பிரத்யேக கான்செப்ட் வீடியோ மூலம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

‘Dencoming Chapter 7: The Jersey Heist’ என்ற பெயரில் ஒரு அதிரடியான சினிமா பாணியிலான டிரைலர் மூலம் இந்த புதிய ஜெர்சி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் ஒரு மர்மமான கடத்தல் (Heist) பாணியிலான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த ஜெர்சி அறிமுகத்தை முன்னிட்டு, எம்.எஸ்.தோனி நேற்று சென்னை வந்தடைந்தார். அவர் விமான நிலையத்திலிருந்து வெளியே வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

https://x.com/ChennaiIPL/status/2027922485363281934

2026-ஆம் ஆண்டுக்கான இந்த புதிய ஜெர்சியில், தோனியின் புகழ்பெற்ற ‘நம்பர் 7’ மற்றும் அணியின் அடையாளமான சிங்கம் மற்றும் நட்சத்திரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த கான்செப்ட் வீடியோவிற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் பின்னணி இசை அமைத்துள்ளார் .

மார்ச் 1 (இன்று) முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி முகாம் சென்னையில்  தொடங்குகிறது. இதில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் கலந்து கொள்கின்றனர். ஐந்தாவது முறையாகக் கோப்பையை வென்ற உற்சாகத்தில் இருக்கும் சிஎஸ்கே அணி, இந்த புதிய பொலிவுடன் 2026 ஐபிஎல் தொடரை எதிர்கொள்ளத் தயாராகிவிட்டது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version