Close Menu
    What's Hot

    திருவள்ளூர் அருகே சோகம் : தொழிற்சாலையில் வாயுக் கசிவு… 7   பேர் பலி!

    நகராட்சி பெயரில் போலி ரசீது; கோவில்பட்டியில் இப்படியும் ஒரு வசூல்

    கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல் ; பேராசிரியரைக்  கைது செய்த சிங்கப் பெண்படை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்.. 8 மீனவர்களுக்கும் 8ஆம் தேதி வரை சிறை!
    தமிழ்நாடு

    மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்.. 8 மீனவர்களுக்கும் 8ஆம் தேதி வரை சிறை!

    Editor TN TalksBy Editor TN TalksJune 30, 2025Updated:June 30, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    stalin
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இலங்கை கடற்படையால் நேற்று கைது செய்யப்பட்ட எட்டு மீனவர்களையும் ஜூலை எட்டாம் தேதி வரை சிறையில் அடைக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மீன்பிடித் தடைக்காலம் கடந்த சில தினங்களுக்கு முன்பு முடிந்த நிலையில், ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்று கரைக்கு திரும்பி கொண்டிருந்த ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 8 பேரை ஒரு படகுடன் இலங்கை கடற்படை கைது செய்தது. கைது செய்யப்பட்ட மீனவர்களை தலைமன்னார் கடற்படை முகாமிற்கு விசாரணைக்காக இலங்கை கடற்படையினர் அழைத்துச் சென்றனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி அவர்களை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    வழக்கை விசாரித்த நீதிபதி ஜூலை 8ம் தேதி வரை அவர்களை சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். இதனால் மீனவர்கள் 8 பேரும் யாழ்ப்பாண சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரத்தை சேர்ந்த 8 மீனவர்கள் மற்றும் படகை உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை மேற்‍கொள்ள வேண்டுமென்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று கடிதம் ‍எழுதியுள்ளார்.

    இதையும் படிக்க:  தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமோக வெற்றி பெறும்.. மத்திய இணையமைச்சர் எல்.முருகன் நம்பிக்கை!

    மீன்பிடித் தொழில் தொடர்பான பிரச்சனைகளை கையாளுவதில் கட்டுப்பாடு மற்றும் பரஸ்பரம் புரிதலை உறுதி செய்வதற்கு இலங்கை அதிகாரிகளுடன் உரிய முறையில் தூதரக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

    Chief Minister M.K. Stalin jai shankar
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமோக வெற்றி பெறும்.. மத்திய இணையமைச்சர் எல்.முருகன் நம்பிக்கை!
    Next Article புதிய புறநகர் பேருந்து முனையம்.. நவம்பருக்குள் பயன்பாட்டுக்கு வரும்.. அமைச்சர் சேகர்பாபு தகவல்!
    Editor TN Talks

    Related Posts

    திருவள்ளூர் அருகே சோகம் : தொழிற்சாலையில் வாயுக் கசிவு… 7   பேர் பலி!

    June 21, 2026

    நகராட்சி பெயரில் போலி ரசீது; கோவில்பட்டியில் இப்படியும் ஒரு வசூல்

    June 21, 2026

    கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல் ; பேராசிரியரைக்  கைது செய்த சிங்கப் பெண்படை

    June 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திருவள்ளூர் அருகே சோகம் : தொழிற்சாலையில் வாயுக் கசிவு… 7   பேர் பலி!

    நகராட்சி பெயரில் போலி ரசீது; கோவில்பட்டியில் இப்படியும் ஒரு வசூல்

    கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல் ; பேராசிரியரைக்  கைது செய்த சிங்கப் பெண்படை

    ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடியது ஈரான்!

    மேகதாது விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டவேண்டும் – திருமாவளவன் வலியுறுத்தல்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.