நிதி, சுகா​தா​ரத் துறைச் செயலர்​கள் உள்​ளிட்ட 7 ஐஏஎஸ் அதி​காரி​கள் கூடு​தல் தலை​மைச் செயலர் அந்​தஸ்​துக்​கும், 6 பேர் முதன்​மைச் செயலர் அந்​தஸ்​துக்​கும் தகுதி உயர்த்​தப்​பட்​டுள்​ளனர்.

தமிழகத்​தில் ஐஏஎஸ் அதி​காரி​களுக்கு காலி பணியிடங்களுக்கு ஏற்ப பதவி உயர்வு அளிக்கப்படுகிறது. அந்​தவகை​யில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண் இயக்​குநர் எம்​.ஏ.சித்​திக், பொருளா​தா​ரம் மற்​றும் புள்​ளி​யியல் துறை ஆணை​யர் ஆர்​.ஜெ​யா, சுகா​தா​ரத் துறைச் செயலர் பி.செந்​தில்​கு​மார், டிட்கோ தலை​வர் சந்​தியா வேணுகோ​பால் சர்​மா, நிதித் துறைச் செயலர் த.உதயச்​சந்​திரன், மத்​திய அரசுப் பணி​யில் உள்ள ஹித்​தேஷ்கு​மார் எஸ்​.மக்​வா​னா, பள்​ளிக்​கல்​வித் துறைச் செயலர் பி.சந்​திரமோகன் ஆகியோர், முதன்​மைச் செயலரில் இருந்து கூடு​தல் தலை​மைச் செயலர் அந்​தஸ்​துக்கு தகுதி உயர்த்​தப்​பட்​டுள்​ளனர்.

அதே​போல, தமிழக தலைமை தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக், பேரிடர் மேலாண்மை ஆணை​யர் சிஜி தாமஸ் வைத்​யன், மனித வளமேலாண்​மைத் துறைச் செயலர் சி.சமயமூர்த்​தி, முதல்​வரின் செயலர் நிலை-2 ஆக உள்ள எம்​.எஸ்​.சண்​முகம், பொதுத் துறைச் செயலர் ரீட்டா ஹரிஷ் தாக்​கர், சமூக நலத் துறைச் செயலர் ஜெய முரளிதரன் ஆகியோர் முதன்​மைச் செயலர் அந்​தஸ்​துக்கு தகுதி உயர்த்​தப்​பட்​டுள்​ளனர்​.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version