15வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான மூன்றாம்கட்ட பேச்சுவார்த்தை வரும் 29ம் தேதி காலை 11மணியளவில் மாநகர் போக்குவரத்துக் கழக குரோம்பேட்டை பயிற்சி மைய வளாகத்தில் நடைபெறும் என மாநகரப் போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றும், 1.43 லட்சம் ஊழியர்களுக்கு, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்படுகிறது. 14வது ஊதிய ஒப்பந்தம் முடிந்து, ஓராண்டு முடிந்துள்ள நிலையில், இன்னும் புதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்படவில்லை. போக்குவரத்து ஊழியர்களின், 15-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக, இதுவரை இரண்டு கட்ட பேச்சு நடைபெற்று முடிந்துள்ளது.

கடந்த மாதம், 13, 14ம் தேதிகளில் நடந்த கூட்டத்தில், 80க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களின் நிர்வாகிகளிடம், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேச்சு நடத்தினார். அப்போது, புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும் என, அமைச்சர் உறுதி அளித்தார்.

இந்த நிலையில், 15வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான மூன்றாம் கட்ட பேச்சு வார்த்தை வரும் 29ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஊதிய உயர்வு உள்ளிட்ட பிரதான கோரிக்கைகள் நிலை குறித்து, விரிவாக எடுத்துரைக்கப்படும் ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version