மேற்காசியாவில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அபுதாபி, துபாய், சார்ஜா, லண்டன், சிங்கப்பூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து சென்னைக்கு வர வேண்டிய 10 விமானங்களும், அங்கிருந்து புறப்பட வேண்டிய 10 புறப்பாடு விமானங்களும் சுமார் 3 மணி நேரம் வரை தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன.

இதுமட்டுமின்றி, கொழும்பு – சென்னை மற்றும் சென்னை – கொழும்பு ஆகிய இரண்டு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்களும் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமான விமான இயக்கத்தில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் மாற்றங்கள் மற்றும் தாமதங்கள் குறித்த முறையான முன்கூட்டிய அறிவிப்புகள் எதுவும் பயணிகளுக்கு முறையாக வழங்கப்படவில்லை எனத் கூறப்படுகிறது.

விமானங்கள் ரத்து மற்றும் தாமதம் குறித்த உரிய தகவல்கள் கடைசி நேரத்தில் தெரியவந்ததால், விமான நிலையத்தில் காத்திருந்த பயணிகள் பெரும் குழப்பத்திற்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version