Close Menu
    What's Hot

    இந்திய கடற்படையின் புதிய தலைமைத் தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்பு!

    5 லட்சம் காலிப்பணியிடங்கள்: இளைஞர்களுக்கு உடனே வேலை வழங்க அன்புமணி வலியுறுத்தல்!

    ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு அரிவாள் வெட்டு!. திமுக கவுன்சிலர் மகன் போலீசில் சரண்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»நெல்லையப்பர் கோவில் வசந்த உற்சவத்தில் 45 ஆண்டுகளுக்குப் பிறகு இசைக்கப்பட்ட தங்க நாதஸ்வரம்!
    தமிழ்நாடு

    நெல்லையப்பர் கோவில் வசந்த உற்சவத்தில் 45 ஆண்டுகளுக்குப் பிறகு இசைக்கப்பட்ட தங்க நாதஸ்வரம்!

    Editor TN TalksBy Editor TN TalksMay 21, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IMG 20250521 WA0004
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    45 ஆண்டுகளுக்கு பிறகு நெல்லை நெல்லையப்பர் திருக்கோவில் வசந்த உற்சவத்தில் இசைக்கப்பட்ட தங்க நாதஸ்வரம். திரளான பக்தர்கள் மெய் சிலிர்த்து நாதஸ்வர இசையுடன் சுவாமி தரிசனம் செய்தனர்.

    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றானது நெல்லை நெல்லையப்பர் திருக்கோவில். இத்திருக்கோவிலில் ஆண்டின் 12 மாதங்களும் பல்வேறு உற்சவங்கள் நடைபெறும். இத்திருகோவிலில் சித்திரை மாதம் நடைபெறும் வசந்த உற்சவம் வெகு விமர்சையான விழாவாகவும் அக்னி நட்சத்திரம் தொடங்கிய பின் 17 நாட்கள் சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளி வசந்த உற்சவம் நடைபெறும் இந்த உற்சவத்தின் போது சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் எழுந்தருளும் மண்டபம் வெட்டிவேர்களால் அலங்கரிக்கப்பட்டு குளிர்ச்சியூட்டக்கூடிய அனைத்து வகையான பொருட்களும் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.

    இந்த ஆண்டுக்கான வசந்த உற்சவ திருவிழா கடந்த 13ஆம் தேதி தொடங்கியது.சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் நீர் நிரப்பப்பட்ட வசந்த மண்டபத்தில் எழுந்தருளி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.கோடை காலத்தில் வெப்பம் தனியும் வகையில் பிரார்த்தனை செய்யப்பட்டு வெள்ளரிக்காய்,பானகம் உள்ளிட்ட பொருட்கள் வைத்து சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது.வசந்த உற்சவத்தின் எட்டாம் திருநாளான இன்று காலை சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாளுக்கு வசந்த மண்டபத்தில் வைத்து சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது.

    தொடர்ந்து மாலையில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடத்தப்பட்டது தொடர்ந்து வசந்த மண்டபத்தில் சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் ஏழு முறை வளம் வந்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.முதல் சுற்றின் போது மல்லாரி இசையும் இரண்டாவது சுற்றில் திருமுறை பாராயணம் மூன்றாவது சுற்றில் வேதபாராயணம் நான்காவது சுற்றில் ருத்ர ஜபம் ஆகியவை செய்யப்பட்டது. ஐந்தாவது சுற்றில் தங்கநாதசுரம் இசைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

     

    கடந்த 45 ஆண்டுகளாக நாதஸ்வரம் பழுது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக தங்க நாதஸ்வரம் வசந்த உற்சவத்தின் போது இசைக்கப்படாமல் இருந்தது பின்னர் நெல்லையப்பர் கோவில் நிர்வாகத்தின் மூலம் பாரம்பரிய பூஜைகள் நடத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையில் பல்வேறு முயற்சிகளுக்கு பின்னர் 45 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு தங்க நாதஸ்வரம் நெல்லைப்பர் கோவில் வசந்த உற்சவத்தில் இசைக்கப்பட்டது. கோவில் நாதஸ்வர கலைஞர் சரவணன் மற்றும் இசை கலைஞர்கள் மூலம் இந்த ஆண்டு தங்க நாதஸ்வரம் வசந்த உற்சவத்தின் ஐந்தாவது சுற்றில் இசைக்கப்பட்டது.

    தொடர்ந்து தங்க நாதஸ்வரத்தில் தியாகராஜர் கீர்த்தனைகள் வாசிக்கப்பட்டு சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் வசந்த மண்டபத்தில் வளம் வந்த நிகழ்ச்சியை திரளான பக்தர்கள் மெய்சிலிர்க்க கண்டு தரிசனம் செய்தனர்.

    கோவில் பூஜைகள் சித்திரை விழா சுவாமி காந்திமதி தங்க நாதஸ்வரம் தமிழ் சமய விழா தியாகராஜர் கீர்த்தனை திருக்கோவில் விழா திருநெல்வேலி நாதஸ்வர இசை நாதஸ்வர கலைஞர் நெல்லையப்பர் கோவில் வசந்த உற்சவம்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous ArticleVastu Tips: போர்க்களமாகும் படுக்கை அறை.. கணவன் மனைவி சண்டை தீர பரிகாரம் !
    Next Article அனுமதியற்ற மனைகள்: சட்டபூர்வமாக்குவதற்கான காலக்கெடு நீட்டிப்பு!!
    Editor TN Talks

    Related Posts

    5 லட்சம் காலிப்பணியிடங்கள்: இளைஞர்களுக்கு உடனே வேலை வழங்க அன்புமணி வலியுறுத்தல்!

    May 31, 2026

    ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு அரிவாள் வெட்டு!. திமுக கவுன்சிலர் மகன் போலீசில் சரண்!

    May 31, 2026

    குர்பானி தடை உத்தரவு விவகாரம்: தமிழக அரசு தலையிட எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!

    May 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இந்திய கடற்படையின் புதிய தலைமைத் தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்பு!

    5 லட்சம் காலிப்பணியிடங்கள்: இளைஞர்களுக்கு உடனே வேலை வழங்க அன்புமணி வலியுறுத்தல்!

    ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு அரிவாள் வெட்டு!. திமுக கவுன்சிலர் மகன் போலீசில் சரண்!

    குர்பானி தடை உத்தரவு விவகாரம்: தமிழக அரசு தலையிட எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!

    சிவகங்கை அருகே புலி, வில், அம்பு சின்னங்களுடன் அரிய வகை கல்வெட்டு கண்டெடுப்பு!

    Trending Posts

    சென்னை : மதுபான பாரில் தகராறு..! கார் ஏற்றி கொ** செய்யப்பட்ட இளம்பெண்..!

    May 31, 2026

    முப்படைகளின் தலைமை தளபதியானார் தமிழர் ராஜா சுப்ரமணி – அணிவகுப்பு மரியாதை ஏற்பு

    May 31, 2026

    சிவகங்கை அருகே புலி, வில், அம்பு சின்னங்களுடன் அரிய வகை கல்வெட்டு கண்டெடுப்பு!

    May 31, 2026

    கவனம்!. குர்குரே சாப்பிட்ட போது மூச்சுத்திணறல்!. இளைஞர் பரிதாப மரணம்!

    May 31, 2026

    500 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து!. சுற்றுலா பயணிகள் 8 பேர் பலி!

    May 31, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.