தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு தினங்களாக நெல்லை மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த தீபக் பாண்டியன். இவர் பசுபதி பாண்டியன் ஆதரவாளர், பசுபதி பாண்டியன் கொலை செய்யப்பட்டதை அடுத்து தீபக் பாண்டியன் மீது கொலை, கொள்ளை, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் அவருக்கு தொடர்பு இருந்தது.

இந்நிலையில் இவரை பாளையங்கோட்டையில் உள்ள ஒரு உணவகத்தில் தனது காதலி மற்றும் அவரது தோழிகளுடன் சாப்பிட்டு விட்டு வெளியே வந்த அவரை ஒரு கும்பல் கொடூரமாக வெட்டி கொலை செய்தது. அதன் சி.சி.டி.வி காட்சிகளும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து தீபக் பாண்டியன் கொலை செய்தவர்களை பழி தீர்ப்போம் என கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்படும் பதிவுகள் வைரலாகி வருகிறது. இதனை அடுத்து தமிழகம் முழுவதும் காவல் துறையினர் சர்ச்சைக்குரிய பதிவுகளை பகிரும் நபர்கள், பதிவு செய்யும் நபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சரண் என்பவர் மதுக்கரை பகுதியில் டீக்கடையில் பணியாற்றி வருகிறார். அவர் வாட்ஸப் குழுவில் பகிர்ந்த பதிவை அடுத்து அவரை மதுக்கரை காவல் துறையினர் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version