திருப்பூர் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டதால் பல அடி உயரத்திற்கு எழும்பிய குடிநீர் அருவி போல கொட்டியது .
மேட்டுப்பாளையம் பவானி ஆற்றிலிருந்து சாமண்ணா நீரூந்து நிலையம் வழியாக குடிநீர் சாம்பள ராட்சத குழாய்களில் ஊடாக மேட்டுப்பாளையம், அன்னூர், அவிநாசி வழியாக திருப்பூர் மாநகராட்சிக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
இந்த நடைமுறையில், இன்று மதியம் மேட்டுப்பாளையம்–அன்னூர் சாலையில் உள்ள நடூர் பாலம் அருகே குடிநீர் குழாயில் திடீரென பிளவு ஏற்பட்டது. இதனால் குடிநீர் பெரும் அழுத்தத்தில் பல அடி உயரத்திற்கு மேலே பாய்ந்து அருவிபோல் சாலையில் கொட்டியது. அந்த பகுதிக்குச் சென்ற பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் வாகனங்களை நிறுத்தி அருவிபோல் கொட்டும் தண்ணீரை செல்பி எடுத்தும், வீடியோ எடுத்தும் கண்டு ரசித்தனர்.
இந்த குழாய் உடைப்பால் பெரும் அளவிலான குடிநீர் வீணாக சாலையில் கரைந்து விட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் திருப்பூர் மாநகராட்சி குடிநீர் திட்டத் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடனடியாக பழுது சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இதன் விளைவாக, அந்த சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
