Close Menu
    What's Hot

    அடேங்கப்பா இவ்வளவா? – பாரதிராஜா பெற்ற விருதுகளின் பட்டியல்

    காற்றோடு கலந்தார் உங்கள் பாசத்துக்குரிய பாரதிராஜா

    முதலமைச்சர் விஜய்யின் முதல் மாதப் பயணம்! சாதித்தது என்ன?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»சென்னை உயர்நீதிமன்றத்தை கண்டித்து திராவிட இயக்க தமிழர் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம்!!
    தமிழ்நாடு

    சென்னை உயர்நீதிமன்றத்தை கண்டித்து திராவிட இயக்க தமிழர் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம்!!

    Editor TN TalksBy Editor TN TalksMay 23, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    poraattam
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் ஆதரவு அளித்திருப்பதை தொடர்ந்து, அந்த தீர்ப்புக்கு எதிரான உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியதைக் கண்டித்து, திராவிட இயக்க தமிழர் பேரவை சார்பில் கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த கண்டன ஆர்ப்பாட்டம் கோவை பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பேரவைப் பிரதிநிதிகள் கூறியதாவது:

    • திருநெல்வேலியைச் சேர்ந்த பாஜகவைச் சேர்ந்த ஒருவர், உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு இடைநிறுத்த உத்தரவு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் விடுமுறை அமர்வில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், தமிழக அரசின் அதிகாரத்தை மறுக்கும் வகையிலும், உச்ச நீதிமன்ற தீர்ப்பை தளர்த்தும் வகையிலும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது அரசியல் சாசனத்துக்கும் ஜனநாயகத்துக்கும் எதிரான நடவடிக்கையாகும்.
    https://tntalks.in/storage/2025/05/poraattam-1.mp4
    • இத்தீர்ப்பை திராவிட இயக்கங்கள் கடுமையாக எதிர்க்கின்றன. மக்கள் விரோதமான இந்த உத்தரவை வழங்கிய நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் லட்சுமிநாதனை குடியரசுத் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்றம் உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.
    • தமிழ்நாட்டின் மக்கள் நலனுக்காக தமிழக அரசு செயல்படும்போது, நீதிமன்றங்கள் வழியாக அதை தடுக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இவை சீர்திருத்தங்களுக்கு எதிரான மனப்பாங்கை பிரதிபலிக்கின்றன.

    இதனைத் தொடர்ந்து, திராவிட இயக்க தமிழர் பேரவை தலைமையிலான பல்வேறு அமைப்புகள் கோவையில் கண்டன போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றன. இந்த போராட்டங்களை தமிழகம் முழுவதும் விரிவுப்படுத்தும் திட்டம் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

    anti-people verdict BJP Coimbatore Constitution dismissal from post Dravidian movement High Court Justice Lakshminathan Justice Swaminathan protest demonstration supreme court Tamil Nadu government Tamilar Peravai vacation bench Vice Chancellor appointment welfare schemes அரசியல் சாசனம் உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றம் கண்டன ஆர்ப்பாட்டம் கோவை தமிழர் பேரவை தமிழ்நாடு அரசு திராவிட இயக்கம் துணைவேந்தர் நியமனம் நீதிபதி சுவாமிநாதன் நீதிபதி லட்சுமிநாதன் பதவி நீக்கம் பாஜக மக்கள் நல திட்டங்கள் மக்கள் விரோத தீர்ப்பு விடுமுறை அமர்வு
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅண்ணாமலை பாணி பாஜகவுக்கு வேண்டாம்… என்ன செய்தது வார் ரூம் பாலிடிக்ஸ்?
    Next Article திருப்பூர் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் திடீர் உடைப்பு.. அருவி போல் கொட்டிய தண்ணீர்!!
    Editor TN Talks

    Related Posts

    அடேங்கப்பா இவ்வளவா? – பாரதிராஜா பெற்ற விருதுகளின் பட்டியல்

    June 10, 2026

    காற்றோடு கலந்தார் உங்கள் பாசத்துக்குரிய பாரதிராஜா

    June 10, 2026

    முதலமைச்சர் விஜய்யின் முதல் மாதப் பயணம்! சாதித்தது என்ன?

    June 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அடேங்கப்பா இவ்வளவா? – பாரதிராஜா பெற்ற விருதுகளின் பட்டியல்

    காற்றோடு கலந்தார் உங்கள் பாசத்துக்குரிய பாரதிராஜா

    முதலமைச்சர் விஜய்யின் முதல் மாதப் பயணம்! சாதித்தது என்ன?

    தமிழகம் முழுவதும் இன்று முதல் களமிறங்கும் ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை

    முதல்வர் விஜய் இன்று டெல்லி பயணம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.