கனமழை எச்சரிக்கை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள தொட்டபெட்டா காட்சிமுனை, பைன்மரகாடுகள் நாளை ஒரு நாள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரியில் கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ள நிலையில் உதகையில் தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்டுள்ள நிவாரண முகாமை தென்மேற்கு பருவமழை கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள லலிதா ஐஏஎஸ் மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்ய தண்ணீரு ஆகியோர் ஆய்வு செய்தனர்.
தலையாட்டுமந்து பகுதியில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை அவர்கள் ஆய்வு செய்தனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய லட்சுமி பவ்யா,
தென்மேற்கு பருவமழைக்கு உதகை, குந்தா, கூடலூர் பந்தலூர் ஆகிய நான்கு தாலுகாக்கள் பாதிக்கப்படும் என்றும் மலை பாதிப்புகளை கண்காணிக்க 42 குழுக்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் இருப்பதாகவும் உள்ளூர் மக்களும் சுற்றுலா பயணிகளும் மின்கம்பங்களுக்கு அருகே செல்ல வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

மேலும் நிலச்சரிவு அபாயகரமான இடங்களில் உள்ள பொதுமக்கள் நிவாரண முகாம்களுக்கு வந்து தங்குமாறு கேட்டுக்கொண்டார்.
ரெட் அலர்ட் எச்சரிக்கை இருப்பதால் 3 நாட்களுக்கு டிரக் தமிழ்நாடு திட்டத்தின் மூலம் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் மலையேற்றம் செல்ல கடை விடுக்கப்படும் என்றும் இன்று காலை முதலே படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளது போல நாளை மற்றும் நாளை மறுநாளும் ரத்து செய்ய இருப்பதாக கூறிய லட்சுமி பவ்யா தண்ணீரு நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் மரங்களுக்கு கிழோ அல்லது அபாயகரமான இடங்களிலோ வாகனங்களை நிறுத்தக்கூடாது என்றும் புகைப்படம் செல்ஃபி போன்றவைகளை எடுப்பதை தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
இதனிடையே அதிக கன மழை எச்சரிக்கை காரணமாக தொட்டபெட்டா காட்சி முனை மற்றும் கூடலூர் சாலையில் உள்ள பைன் மரக்காடுகள் ஆகிய இரண்டு சுற்றுலா தளங்களும் நாளை ஒருநாள் மூடப்படுவதாக நீலகிரி மாவட்ட வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
