மதுரையில் நடைபெறவுள்ள தவெக மாநாட்டிற்காக அமைக்கப்பட்டிருந்த 100 அடி கொடி கம்பம் சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விஜய்யின் தவெக சார்பில் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நாளை நடைபெறுகிறது. வாகை சூடும் வரலாறு திரும்புகிறது. வெற்றி பேரணியில் தமிழ்நாடு என்ற கொள்கை முழக்கத்துடன் நடைபெறவுள்ள இம்மாநாட்டிற்காக பிரம்மாண்டமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

சுமார் 506 ஏக்கர பரப்பளவில் 1.5லட்சம் பேர் அமரும் வகையில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்படுள்ளது. மாநாட்டில் கலந்து கொள்வோருக்காக சுத்திகரிக்கப்பட்ட, குடிநீர், பெண்களுக்கான பிங்க் ரூம் வசதி என அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. மாநாட்டின் முகப்பில் தவெகவின் கொள்கை தலைவர்களுடன் விஜய் இருப்பது போன்ற பேனர்களுடன் கூடிய நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது.

அதேப் போல மாநாட்டு முகப்பில் 100 அடி உயர கொடிக்கம்பம் அமைக்கப்பட்டு, மாநாடு தொடங்கும் முன், விஜய் அக்கொடி மரத்தில் கொடி ஏற்றி வைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக 100 அடி கொண்ட கொடி கம்பம், ராட்சத கிரேன் முலம் நடப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக கொடிக்கம்பம், தவெக நிர்வாகியின் கார் மீது விழுந்தது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

கிரேனில் உள்ள பெல்ட் அறுந்ததில் கொடிக்கம்பம் விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கீழே விழுந்த கொடிக்கம்பத்தை மீட்டு அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது.

Share.
Leave A Reply

Exit mobile version