Close Menu
    What's Hot

    விஜய்யை நோக்கி வரும் முன்னாள் அமைச்சர்கள்!. முட்டுக்கட்டை போடும் அதிமுக தலைமை?. செங்கோட்டையன் பகீர்!

    அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்ய ஐகோர்ட் உத்தரவு!. அரசியல் தலைவர்கள் வரவேற்பு!

    14,000 ஆண்டு கால வரலாறு!. இந்தியாவில் பிரபலமான ரொட்டி!. முதலில் எங்கு தயாரிக்கப்பட்டது தெரியுமா?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»மன்னார் வளைகுடா நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி!
    தமிழ்நாடு

    மன்னார் வளைகுடா நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

    Editor TN TalksBy Editor TN TalksNovember 19, 2025Updated:November 19, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    TN rain
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வங்கக்கடலில் இலங்கை கடலோர பகுதிக்கு அப்பால், குமரிக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி மன்னார் வளைகுடா நோக்கி நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை கடற்பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இலங்கை கடலோர பகுதிக்கு அப்பால் குமரிக்கடல் பகுதியில் நிலவியது. அடுத்த 24 மணி நேரத்தில், இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு, வடமேற்கு திசையில், மன்னார் வளைகுடா நோக்கி நகரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில், வரும் 22ம் தேதி புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தமிழகத்தில் சில இடங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் இடி மின்னலுடன், லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

    மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. வரும் 21ம் தேதி முதல் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன், லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இன்றும், நாளையும் மன்னார் வளைகுடா, குமரிக்கடல், தென் மாவட்ட கடலோரப் பகுதிகளில், சூறாவளிக்காற்று வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் 17 செ.மீ. மழையும், இதற்கு அடுத்தபடியாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்து பகுதியில் 14 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமெட்ரோ ரயில் விவகாரத்தில் மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் !!!
    Next Article ரத்த உற்பத்தியை கடகடவென உயர்த்தும் சுவரொட்டி! இத்தனை முறை சாப்பிட்டால் அனீமியா தொல்லை நீங்கும்!
    Editor TN Talks

    Related Posts

    விஜய்யை நோக்கி வரும் முன்னாள் அமைச்சர்கள்!. முட்டுக்கட்டை போடும் அதிமுக தலைமை?. செங்கோட்டையன் பகீர்!

    February 20, 2026

    அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்ய ஐகோர்ட் உத்தரவு!. அரசியல் தலைவர்கள் வரவேற்பு!

    February 20, 2026

    14,000 ஆண்டு கால வரலாறு!. இந்தியாவில் பிரபலமான ரொட்டி!. முதலில் எங்கு தயாரிக்கப்பட்டது தெரியுமா?

    February 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    விஜய்யை நோக்கி வரும் முன்னாள் அமைச்சர்கள்!. முட்டுக்கட்டை போடும் அதிமுக தலைமை?. செங்கோட்டையன் பகீர்!

    அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்ய ஐகோர்ட் உத்தரவு!. அரசியல் தலைவர்கள் வரவேற்பு!

    14,000 ஆண்டு கால வரலாறு!. இந்தியாவில் பிரபலமான ரொட்டி!. முதலில் எங்கு தயாரிக்கப்பட்டது தெரியுமா?

    மாம்பழம் சின்னத்தை முடக்க கோரிய வழக்கு!. ராமதாஸுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை!

    ஆளுநர், இபிஎஸ்-க்கு நன்றி தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்!. எதற்கு தெரியுமா?

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.