சென்னையில் தங்கத்தின் விலை இன்று (ஏப்ரல் 10) அதிரடியாக உயர்ந்து சவரன் 1.13 லட்சத்தைத் தாண்டியுள்ளது நகைப்பிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் புவிசார் அரசியல் சூழல்கள் காரணமாகத் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளதே இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. இன்று ஒரே நாளில் சவரனுக்கு 1,000 ரூபாய் உயர்ந்துள்ள நிலையில், ஒரு கிராம் தங்கம் 125 ரூபாய் அதிகரித்து 14,125 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் 1,13,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை, தற்போது மீண்டும் ஒரு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. வரும் நாட்களில் சர்வதேச சந்தை நிலவரத்தைப் பொறுத்து விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருப்பது, திருமண விசேஷங்களுக்காக நகை வாங்கத் திட்டமிட்டுள்ள நடுத்தரக் குடும்பத்தினருக்குக் கூடுதல் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.200 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,000-க்கும், சவரனுக்கு ரூ.1,600 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,12,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதேபோல், வெள்ளி விலையும் இன்று கிராமுக்கு ரூ.5 உயர்ந்து, ரூ.265க்கும், ஒரு கிலோ ரூ.5,000 உயர்ந்து ரூ. 2,65,000க்கும் விற்பனையாகிறது

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version