அய்யலூர் அருகே திருவிழாவில் கழுகு மரம் ஏறிய இளைஞர் 60 அடி உயரத்திலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்த வீடியோ வைரலாகி வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அடுத்த அய்யலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ளது கோம்பை மலை கிராமம் இப்பகுதியில் கடந்த மூன்று நாட்களாக கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது.

இந்த விழாவின் 3-ம் நாளான நேற்று கழு மரம் ஏறும் நிகழ்வு நடைபெற்றது இந்த கழு மரம் கழு ஏறும் நிகழ்வில் 60 அடி உயரமுள்ள இரண்டு கழு மரங்கள் அமைக்கப்பட்டு ஊரில் உள்ள இளைஞர்கள் இரண்டு கழு மரத்திலும் போட்டி போட்டுக் கொண்டு ஏறினர்.

அப்போது கழுமரத்தின் 60 அடி உச்சிக்கு சென்ற சின்ராஜ் என்ற இளைஞர் திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்தார். கீழே விழுந்தவரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள் பிடிக்கும் போது பத்துக்கு மேற்பட்ட நபர்களுக்கும் காயம் ஏற்பட்டது.

மேலும் 60 அடி உயரத்திலேயே இருந்து கீழே விழுந்த சின்ராஜ் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்
போதிய பாதுகாப்பு இல்லாதாலும் அதேபோல் கழு மரத்தில் விளக்கெண்ணெய் கத்தாழை உள்ளிட்ட வழுக்கும் பொருட்களை தேய்த்து வைப்பார்கள் வைப்பதால், இது போன்ற விபரீதங்கள் நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

எதிர்வரும் காலங்களில் திருவிழாக்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை முறைப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version