கைதான தமிழக தீவிரவாதி அபுபக்கர் சித்திக்கின் ஆந்திர மாநிலம் அன்னமையா மாவட்டத்தில் உள்ள வீட்டில் இருந்து சூட்கேஸில் வெடிபொருளை ஆந்திர போலீசார் கைப்பற்றி உள்ளதாக தகவல்.
அபுபக்கர் சித்திக்கை கைது செய்யும் போது அவரது 3 மனைவி போலீசாருடன் தகராறு செய்து தாக்கியதாக அவரை ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர்.
அபுபக்கர் சித்திக் வீட்டில் இருந்து சுமார் 15 கிலோ ஐஇடி ரக வெடிபொருள், 18 செல்போன்கள்,லேப் டாப் உள்ளிட்டவற்றை ஆந்திர போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த வெடிபொருள் பெங்களூருவில் 2002 ஆம் ஆண்டு என்கவுண்டரில் கொல்லப்பட்ட இமாம் அலியிடம் இருந்து பெற்றதாக அபுபக்கர் சித்திக் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல்.
அபுபக்கர் சித்திக் வெடிகுண்டு தயாரிப்பதில் கைதேர்ந்தவர். அவருக்கு வெடிகுண்டு தயாரிப்பது எப்படி என்பதனை கற்றுக் கொடுத்தவர் தான் இந்த மதுரையைச் சேர்ந்த இமாம் அலி.
