Close Menu
    What's Hot

    தமிழ்நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி ; 59.31 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்வு- அரசு தகவல்

    முதலமைச்சர் குறித்து முகநூலில் அவதூறு பதிவு – திமுகவினர் 2 பேர் கைது!

    சொத்து கணக்கு: செந்தில் பாலாஜி வெற்றிக்கு எதிராக தேர்தல் வழக்கு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»20 ஆண்டுகள் சிறைதண்டனையில் இருந்து வெளிவந்த காதலன்..
    இந்தியா

    20 ஆண்டுகள் சிறைதண்டனையில் இருந்து வெளிவந்த காதலன்..

    Editor TN TalksBy Editor TN TalksJuly 11, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1500x900 748229 jail01
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    காதலியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கில் காதலனுக்கு விதிக்கப்பட்ட 20 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    மைனர் பெண்ணை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கோவையை சேர்ந்த மதன்குமார் என்பவருக்கு எதிராக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

    இந்த வழக்கை விசாரித்த கோவை சிறப்பு நீதிமன்றம் மதன்குமாருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து கடந்த 2023 ம் ஆண்டு தீர்ப்பளித்தது.இந்த தீர்ப்பை எதிர்த்து மதன் குமார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, மதன் குமார் தரப்பில், கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண்ணும் மனுதாரரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். அப்பெண்ணுக்கு 40 வயதுடைய உறவினரை திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்ததால் காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இருவரும் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் நெருக்கமாக இருந்துள்ளனர்.

    சம்பவம் நடந்த போது கல்லூரியில் 2 ம் ஆண்டு படித்த அந்த பெண்ணுக்கு, 18 வயது நிரம்பி விட்டது என்று சுட்டிக்காட்டி, தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது.

    வழக்கை விசாரித்த நீதிபதி, கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் பெண் 18 வயது பூர்த்தி அடையாதவராக இருக்க முடியாது என்றும் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண், மைனர் என சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி போக்சோ சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட 20 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்து, மதன் குமாரை விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதீவிரவாதி அபுபக்கர் சித்திக் வீட்டில் பதுக்கி வைத்திருந்த வெடிகுண்டு சிக்கியது:
    Next Article கோவையில் இடுகாடு ஆக்ரமிப்பா? சந்தன மரங்கள் கடத்தலா?
    Editor TN Talks

    Related Posts

    மேற்கு வங்கத்தில் உடையும் TMC.. மம்தா vs அதிருப்தியாளர்கள்.. குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் மம்தா தரப்பு..!!

    July 7, 2026

    நீட் தேர்வு கட்டண ரீஃபண்ட்.. இன்றே கடைசி நாள்..!! என்டிஏ அறிவிப்பு..!!

    July 7, 2026

    மும்பையை புரட்டிப்போட்ட கனமழை.. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்பு..!!

    July 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தமிழ்நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி ; 59.31 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்வு- அரசு தகவல்

    முதலமைச்சர் குறித்து முகநூலில் அவதூறு பதிவு – திமுகவினர் 2 பேர் கைது!

    சொத்து கணக்கு: செந்தில் பாலாஜி வெற்றிக்கு எதிராக தேர்தல் வழக்கு!

    மீனாட்சி அம்மன் கோயில் சொத்து ஆக்கிரமிப்பாளர்கள் யார் யார்? – அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

    வயநாடு அருகே நிலச்சரிவு – மண்ணுக்குள் சிக்கியவர்களை மீட்க மீட்புப் பணிகள் தீவிரம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.