Close Menu
    What's Hot

    ‘காக்ரோச் ஜனதா கட்சி’ எக்ஸ் கணக்கு –  மத்திய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

    வயநாடு நிலச்சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு; பாதிக்கப்பட்டோருக்கு முழு ஆதரவு வழங்க பிரியங்கா காந்தி வேண்டுகோள்

    வளமான எதிர்காலத்தை நோக்கி இந்தியா – இந்தோனேசியா பயணம்;  இருநாடுகளின் கலாச்சார பிணைப்பை புகழ்ந்த பிரதமர் மோடி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»கோவையில் இடுகாடு ஆக்ரமிப்பா? சந்தன மரங்கள் கடத்தலா?
    தமிழ்நாடு

    கோவையில் இடுகாடு ஆக்ரமிப்பா? சந்தன மரங்கள் கடத்தலா?

    Editor TN TalksBy Editor TN TalksJuly 11, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Screenshot 2025 07 11 200859
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோவை, செல்வபுரம் கல்லாமேடு பகுதியில் அமைந்து உள்ள இந்துக்கள் மயானம், கோவை மாநகராட்சியின் பராமரிப்பில் செயல்பட்டு வருகிறது. 15 க்கும் மேற்பட்ட தேவேந்திரகுல சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இந்த இடத்தை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்கள்.

    இந்நிலையில் மயானத்தில் கர்ம காரியங்களுக்கு மண்டபமும், தகன மேடையும் உள்ளன.
    ஆனால், சமீப காலமாக இந்த மயானம் சரியான பராமரிப்பின்றி உள்ளது. இதனால், அந்த இடம் சமூக விரோதிகள் தங்கும் கூடாரமாக மாறி உள்ளது என குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ளன.

    இதனை அடுத்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு, இருவர் போதைப் பொருட்களுடன் இப்பகுதியில் கைது செய்யப்பட்ட சம்பவமும் இதை உறுதி செய்கிறது. மேலும், மயானத்திற்குப் பக்கத்தில் உள்ள தனியார் நபர் ஒருவர் தனது நிலத்தை மனைகளாக விற்க முயற்சித்து வருகிறார்.

    இதன் ஒரு பகுதியாக, மயானத்தின் சுற்றுச்சுவரை இடித்து, முன்னோர்களுக்கு அமைத்து இருந்த மூன்று ஜீவ சமாதிகளை இடித்து, மேலும் அங்கு இருந்த சமாதிகளை இடித்து, அந்த இடத்தில் கற்கள் நட்டு வைத்து இருப்பதாகவும், சந்தன மரங்கள் இரவோடு, இரவு கடத்தப்பட்டதாகவும் புகார்கள் எழுந்து உள்ளன. மொத்தம் 15 க்கும் மேற்பட்ட சந்தன மரங்கள் இங்கு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனை காவல் துறையும் மாநகராட்சியும் விசாரணை செய்ய வேண்டுமென மக்கள் வலியுறுத்துகிறார்கள்.

    Screenshot 2025 07 11 200924

    ஜீவ சமாதிகள் உட்பட சமாதிகளை இடித்தது மிகவும் வேதனையான செயலாக இருப்பதாகவும், இந்த செயல்களுக்கு உள்ளூரில் உள்ள தி.மு.க கவுன்சிலரின் துணை இல்லாமல் நடக்க முடியாது எனவும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    ஆண்டுதோறும் ஆடி அமாவாசை நாளில் மக்கள் இங்கு வந்து வழிபாடு நடத்துவது வழக்கம். பித்ருக்கள், கன்னிமார்களுக்கு பூஜை நடத்தும் இவ்விடம் இப்போது பெரும் அழிவுக்கு உள்ளாகி உள்ளது. இத்தனை பரபரப்புக்கு இடையே, மாநகராட்சி உடனடியாக நடவடிக்கை எடுத்து, மயான சுற்றுச்சுவர் இடித்தவர்கள், சந்தன மரங்களை வெட்டி கடத்தியவர்கள், சமாதிகளை இடித்தவர்கள் ஆகியோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    கோவையில் இரவோடு இரவாக இந்துக்கள் மயானத்தில் ஜீவ சமாதிகளை இடித்து, அங்கு இருந்த சந்தன மரங்களை வெட்டி கடத்தியதை அங்கு வழிபாடு நடத்தும் பெண்கள் கண்ணீர் விட்டு கதறி அழும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article20 ஆண்டுகள் சிறைதண்டனையில் இருந்து வெளிவந்த காதலன்..
    Next Article ஏர் இந்தியா விபத்துக்கான காரணம் இது தான்… முதற்கட்ட அறிக்கை வெளியானது…
    Editor TN Talks

    Related Posts

    திமுக ஆட்சியில் வெளியிடப்பட்ட 5 டெண்டர்கள் ரத்து… போக்குவரத்துத் துறை அதிரடி!

    July 7, 2026

    தமிழ்நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி ; 59.31 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்வு- அரசு தகவல்

    July 7, 2026

    முதலமைச்சர் குறித்து முகநூலில் அவதூறு பதிவு – திமுகவினர் 2 பேர் கைது!

    July 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ‘காக்ரோச் ஜனதா கட்சி’ எக்ஸ் கணக்கு –  மத்திய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

    வயநாடு நிலச்சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு; பாதிக்கப்பட்டோருக்கு முழு ஆதரவு வழங்க பிரியங்கா காந்தி வேண்டுகோள்

    வளமான எதிர்காலத்தை நோக்கி இந்தியா – இந்தோனேசியா பயணம்;  இருநாடுகளின் கலாச்சார பிணைப்பை புகழ்ந்த பிரதமர் மோடி

    திமுக ஆட்சியில் வெளியிடப்பட்ட 5 டெண்டர்கள் ரத்து… போக்குவரத்துத் துறை அதிரடி!

    தமிழ்நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி ; 59.31 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்வு- அரசு தகவல்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.