விபத்து மற்றும் பயணிகளின் பாதுகாப்பு கருதி ஓட்டுநர்கள் செல்போன் பேசியபடி பேருந்தை இயக்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், கடந்த சில நாட்களாக அதிகளவில் விபத்துக்கள் மற்றும் உயிரிழப்பு விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. அதனை ஆய்வு செய்யும்போது சில ஓட்டுநர்கள் பேருந்து இயக்கும்போது செல்போன் பேசிக்கொண்டு இயக்குவதை பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். மேலும் சிசிடிவி கேமரா மூலம் கண்டறியப்பட்டது. எனவே, செல்போன் பேசிக்கொண்டே பேருந்தை இயக்கும்போது கவன சிதறல் ஏற்பட்டு சாலை விபத்துக்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது
இனிவரும் காலங்களில் மாநகர போக்குவரத்து கழக ஓட்டுநர்கள் தங்கள் பணியின்போது தங்களது செல்போன்களை தன்னுடன் பணி செய்யும் நடத்துனரிடம் கொடுத்து வைக்க வேண்டும் என்றும் ஓட்டுநர்கள் பணியின் போது செல்போன் வைத்திருப்பது கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
