எஸ்.ஐ.ஆர். கணக்கெடுப்பு படிவத்தை சரியாக நிரப்பாதவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பும் பணி தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியின் ஒரு பகுதியாக கடந்த 19-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதில், 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இவ்வாறு நீக்கப்பட்டவர்களில் தகுதி உள்ளவர்களை மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க படிவங்கள் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கான கணக்கெடுப்பு படிவத்தை சரியாக பூர்த்தி செய்யாத சுமார் 10 லட்சம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கான கணக்கெடுப்பு படிவத்தை சரியாக பூர்த்தி செய்யாத சுமார் 10 லட்சம் வாக்காளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பும் பணியை தேர்தல் கமிஷன் தொடங்கியுள்ளது.
அந்த நோட்டீசில், ‘முந்தைய எஸ்.ஐ.ஆர்.ன் போது தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் நீங்களோ அல்லது உங்கள் உறவினரோ பதிவு செய்யப்பட்ட வாக்காளராக இருப்பதை உறுதிபடுத்தும் விவரங்களை நீங்கள் பூர்த்தி செய்யவில்லை.
எனவே, தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களான பாஸ் போர்ட், பிறப்பு சான்றிதழ், நிரந்தர வசிப்பிடச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் உள்ளிட்ட 13 ஆவணங்களி ஏதேனும் ஒரு அசல் சான்றுடன் குறிப்பிட்ட நாளுக்குள் சம்பந்தப்பட்ட அதிகாரி முன்பு நேரில் ஆஜராக வேண்டும்’ எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது. அதேநேரத்தில் அதேநேரத்தில் வாக்காளர் சமர்ப்பிக்கும் ஆவணங்களின் நம்பகத்தன்மையை சரிபார்ப்பதற்காக அனுப்பப்படும் எனவும் நோட்டீசில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
