பொங்கலுக்கு முன்னதாக சீனியாரிட்டி அடிப்படையில் பணி ஆணை வழங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதியளித்துள்ளார்.
கடந்த 18 ஆம் தேதி சென்னை சிவனாந்தா சாலையில் தொகுப்பூதிய செவிலியர்களை பணி நிரந்தம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராடத்தை மேற்கொண்டனர். இந்த போராட்டத்தில் பல்வறேு மாவட்டங்களில் இருந்து வந்த செவிலியர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
அன்றயை தினமே காவலர்கள் இவர்களை கைது செய்து கிளாம்பாக்கம் பேருந்து நிலைத்திற்கு அழைத்து அந்தெந்த மாவட்டத்திற்கு அவர்களை போக சொல்லி அறிவுறுத்தினர். ஆனால் தங்களது கோரிக்கையை நிறைவேற்றும் வரை போராட்டத்தை தொடர்வோம் என கூறி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
அதன் பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாத நிலையில் தொடர்ந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போராட்டத்தில் செவிலியர்கள் ஈடுபட்ட செவிலியர்கள் கூடுவாஞ்சேரியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் முன்பு அமர்ந்து தொடர் போராட்டத்தை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்தநிலையில், இன்று இரண்டாம் கட்டமாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் செவிலியர்கள் உடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். அப்போது, தொகுப்பூதிய செவிலியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் மீதான மேல் முறையீட்டை கைவிட்டு செவிலியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். செவிலியர் கண்காணிப்பாளர் நிலை 3 பணியிடங்களை மீண்டும் உருவாக்கிட வேண்டும்.
கொரோனா காலகட்டத்தில் பணி செய்து பணி நீக்கம் செய்யப்பட்ட அனைத்து செவிலியர்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும். பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு முடித்த செவிலியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும். செவிலியர்களுக்கு 7,14,20 மற்றும் 25 ஆண்டுகளில் பதவி உயர்வுக்கான ஊதிய நிர்ணயம் செய்திட வேண்டும்.
அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் செவிலியர் கல்லூரிகள் உருவாக்கிட வேண்டும்.எம்.ஆர்.பி தொகுப்பூதிய செவிலியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். கருவூலம் மூலம் ஊதியம் பெறும் தொகுப்பூதிய செவிலியர்களுக்கு ரூபாய் 18000 ஊதியம் நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிரந்தரத் தன்மையுடைய செவிலியர் மற்றும் செவிலியர் கண்காணிப்பாளர் பணியிடங்களை உருவாக்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது, 35 ஆண்டுகளுக்கு பிறகு எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் புனரமைக்கும் பணிகள் முடிந்து இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. 12 கோடி செலவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
எம்ஆர்பி ஒப்பந்த செவிலியர்களுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பல்வேறு கோரிக்கைகளுக்கு விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிரந்த பணியாளர்களை போல தொகுப்பூதிய செவிலியர்களுக்கும் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அது அரசின் பரிசீலனையில் உள்ளது என கூறினார். நியாமான கோரிக்கைகளை பரிசீலிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
தற்காலிக செவிலியர்களை எம்ஆர்பி மூலம் பணியில் ஜெயலலிதா ஆட்சியில் எடுக்கப்பட்டது. 2014ல் இருந்து தற்காலிக பணியாளர்களாக இருந்து வருகின்றனர்.
தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா காலத்தில் பணியாற்றியதால் 14 ஆயிரம் பெற்ற ஊதியம் 18 ஆயிரமாக உயர்த்தி வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டார். இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு 3614 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.
8,322 செவிலியர்களின் கோரிக்கையை தீவிரமாக பரிசீலித்து வருகிறார்கள். 1200 செவிலியர்கள் முதலமைச்சரால் 11 மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் அமர்த்தப்பட்டுள்ளனர். 169 பேருக்கு உடனடியாக நிரந்தர பணியாணை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 750 பேருக்கு புதிய பணியிடங்களை உருவாக்கி தரப்படும் எனவும் பொங்கலுக்கு முன்பாக சீனியாரிட்டி அடிப்படையில் பணி ஆணை வழங்கப்படும் எனவும் 724 பேர் கொரோனா காலத்தில் பணியாற்றியவர்களுக்கும் தொகுப்பூதிய பணியிடங்களை ஒதுக்கி தரப்படும் என கூறினார்.
செவிலியர்கள் கல்லூரி துவங்க விரைவில் அரசாணை வெளியிடப்பட உள்ளது.
அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து வரவேற்பு தெரிவித்துள்ளனர். 2014 – 2015 ஆம் ஆண்டு இந்த திட்டத்தை கொண்டு வந்தது தவறு எனவும் படிபடியாக செவிலியர்களின் காலிபணியிடங்கள் நிறைவேற்றப்படும் எனவும் தேர்தல் அறிக்கையில் திமுக சொன்னால் அதனை செய்யும் அதிமுக ஆட்சி போல் அல்ல என தெரிவித்தார்.
