கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து மருத்துவமனை அதிகாரபூர்வமாக அறிவிப்பு ஏதும் வெளியிடவில்லை. மேலும் அவரின் உடல்நிலைக்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. ஆனால், இன்று அவர் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் வழக்கமான உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவருக்கு முழு உடல் பரிசோதனை செய்ய மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, அவருக்கு இரத்த பரிசோதனைகள், இசிஜி உள்ளிட்ட சோதனைகள் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
எனவே, விரையில் இதுதொடர்பாக மருத்துவமனை தரப்பில் இருந்து விளக்கமளிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
