‘மக்களுடன் சந்திப்பு’ என்ற பெயரில் அரசியல் பிரசாரத்தை மேற்கொண்டுள்ள நடிகர் விஜய்யின் வாகனத்தை, ஏராளமான தொண்டர்கள் சூழ்ந்ததால் வாகனம் ஊர்ந்து செல்கிறது.

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், ‘மக்களுடன் சந்திப்பு’ என்ற பெயரில் தமது முதல் சுற்றுப்பயணத்தை இன்று தொடங்குகிறார். இன்று முதல் வரும் டிசம்பர் மாதம் 20ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று மக்கள் சந்திப்பு கூட்டம் பிரச்சாரங்களை நடத்த உள்ளார்,

அதன் தொடக்கப் பகுதியாக இன்று திருச்சியில் மக்கள் சந்திப்பு பிரச்சாரத்தை மேற்கொள்கிறார். இந்த பிரசாரத்திற்கு 23 நிபந்தனைகளை திருச்சி காவல்துறை விதித்தது. இதற்காக இன்று காலை சென்னை விமான நிலையத்திலிருந்து தனி விமான மூலம் திருச்சி சென்றடைந்தார்.

பின்னர், தனது பிரசார வாகனம் மூலம் திருச்சி விமான நிலையத்தில் இருந்து விஜய் புறப்பட்டார். அப்போது, காவல்துறையினரால் போடப்பட்டிருந்த தடுப்புகளை மீறி, அவரது ரசிகர்களும், தொண்டர்களும் விஜய்யின் வாகனத்தை சூழ்ந்துகொண்டனர்.

மேலும், சாலைகளில் மக்கள் வெள்ளம் திரண்டதால், நெரிசல் அதிகமாக காணப்பட்டது. விஜய்யின் பிரசார வாகனம் செல்லும் வழிகளில் ரசிகர்களும், தொண்டர்கள் தலைவா, தலைவா என கோஷங்கள் எழுப்பினர். இதனால், பிரசார வாகனம் மெதுவாக, பிரசார பகுதிக்கு சென்றது. திருச்சி விமான நிலையத்தில் இருந்து டோல்கேட் செல்வதற்கே ஒருமணி நேரம் எடுத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜய், அரசியல் பிரசாரம், திருச்சி, மக்கள் வெள்ளம், பிரசார வாகனம், தவெக விஜய், Actor Vijay, Political Campaign, Trichy, Piblic Crowd, Campaign Vehicle, TVK Vijay,

actor vijays campaign vehicle is crawling of volunteers surround at trichy

Share.
Leave A Reply

Exit mobile version