பிரபல திரைப்பட நடிகை அருணா வீட்டில் அமலாக்க துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஒரு லிட்டர் மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்தவர் அருணா. நீலாங்கரையில் தனது கணவர் மோகன் குப்தாவுடன் வசித்து வரும் இவரது வீட்டில் இன்று காலை அமலாக்க துறையினர் திடீர் சோதனையை தொடங்கியுள்ளனர்.

கட்டுமானம் மற்றும் நவீன உள்கட்டமைப்பு மேற்கொள்ளும் பணியினை செய்து வரும் நிறுவனத்தை நடத்தி வரும் மோகன் குப்தா, தனது நிறுவனம் மூலம் செய்த பணப்பரிவர்த்தனையில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்ததை எடுத்து, இந்த சோதனையை அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருவதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகை அருணாவின் கணவர் மோகன் குப்தா கட்டட பொறியாளராகவும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version