மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ரவுடி ஒருவனால் பூட்டுப்போடப்பட்ட சத்திரப்பட்டி காவல் நிலையத்தை பார்வையிட சென்ற சட்டமன்ற எதிர்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி உதயகுமார் உட்பட நூற்றுக்கணக்கான பேர் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் தொகுதி, டி.கல்லுப்பட்டி அருகே உள்ள வி.சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் நேற்று நள்ளிரவு முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் சிலர் காவல்நிலையத்திற்குள் புகுந்து காவல்நிலையத்திலிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி அங்கு இரவு பணியில் இருந்த தலைமைகாவலர் பால்பாண்டியை தாக்கிவிட்டு, பூட்டு போட்டு விட்டு தப்பியோடி விட்டனர்.
சம்பவம் பற்றி அப்பகுதி மக்கள் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமாருக்கு தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து அப்பகுதி மக்களையும், காவல் நிலையத்தையும் நேரில் சந்திக்க வந்தபோது கல்லுப்பட்டி அருகே உள்ள முத்துலிங்கபுரத்தில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி சத்திரப்பட்டிக்கு செல்ல அனுமதி மறுத்தனர்.
Madurai தொகுதிக்குள் நுழைய அனுமதி கேட்கனுமா?என்னை தடுப்பீர்களா?… போலீசிடம் சீறிய RB Udhayakumarhttps://t.co/F1vsKns2T1#RBUdhayakumar #ADMK #RBUdhayakumar #ADMK #ADMKMLA #PoliceVsMLA #TNPolitics #RBvsPolice #ADMKNews @CTR_Nirmalkumar @ADMK4Us @AdmkStudentWing pic.twitter.com/9dB8oSvkrR
— TNTalks (@tntalksofficial) June 14, 2025
இதனை தொடர்ந்து ஆர்.பி.உதயகுமார், காவல்துறை அதிகாரியிடம் நான் இந்த தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர், தொகுதி மக்கள் அச்சத்துடன் உள்ளனர் ஆகவே அவர்களை நான் சந்திக்க வேண்டும், அதேபோன்று பாதிக்கப்பட்ட காவல் நிலையத்தையும் நான் பார்க்க வேண்டும் என்று கூறிய போது காவல்துறை அனுமதி மறுத்தனர்.
இதனை தொடர்ந்துகாவலர்கள் முத்துலிங்காபுரத்தில் தடுத்து நிறுத்தியதால் தரையில அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் இந்த தகவலை தெரிந்த போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து இந்த தகவல் அறிந்த சத்திரப்பட்டி கிராம பொதுமக்கள் திரண்டு முத்துலிங்கபுரத்திற்கு பொதுமக்கள் திரண்டு ஆர்.பி உதயகுமாரிடம் கோரிக்கை மனு வழங்கினர்
அதில் காவல் நிலையத்திற்கு பாதுகாப்பில்லை, எங்களுக்கும் பாதுகாப்பு வேண்டும் என மனு வழங்கினார், இதனை தொடர்ந்து இந்த சம்பவத்தால் அச்சப்பட்டு இருக்கும் மக்களை நான் சந்திக்க வேண்டும், வேண்டுமென்றால் காவல்துறை என் கூட வரலாம் என்று எடுத்துக் கூறியும் அதற்கு அனுமதி மறுத்தனர் இதனை தொடர்ந்த போராட்டத்தை கைவிட மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீசார் ஆர் பி உதயகுமார் உட்பட நூற்றுக்கணக்கான நபர்களை கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து ஆர்.பி. உதயகுமார் கூறியதாவது, இன்றைக்கு சட்ட ஒழுங்கு என்ன விலை? என்று கேட்கும் நிலையில் உள்ளது. போதை நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை, பாலியல் சம்பவங்களை கட்டுப்படுத்த முடியவில்லை, இன்றைக்கு காவல்துறையை தாக்கும் தைரியம் எப்படி வந்தது? காவல்துறைக்கு பாதுகாப்பு இல்லை என்றால் மக்களின் நிலை என்ன? இன்றைக்கு காவல் துறையை கூட காப்பாற்ற முடியாத ஒரு அவல நிலைக்கு உள்ளது? மக்களை பாதுகாக்கும் காவல்துறைக்கு இந்த நிலை என்றால் மக்களின் நிலை என்ன என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும் என கூறினார்.