சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் வரும் ஜன.4,5 தேதிகளில் சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நடத்தப்படும் அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார்.
இதுதொடர்பாக, அதிமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி K. பழனிசாமி அவர்கள், ‘மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற உன்னத நோக்கத்தை லட்சியமாகக் கொண்டு சட்டமன்றத் தொகுதி வாரியாக, தொடர் பிரச்சார சூறாவளி சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்நிலையில், ‘மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற உன்னத நோக்கத்துடனான புரட்சித் தமிழரின் எழுச்சிப் பயணத்தின் தொடர்ச்சியாக,வரும் 4ம் தேதி ஞாயிற்றுக் கிழமை மாலை சேலம் மாவட்டம், வீரபாண்டி சட்டமன்றத் தொகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.
இதனை தொடர்ந்து 5-1-2026 (திங்கட்கிழமை) அன்று கள்ளக்குறிச்சி மாவட்ட மகளிர் அணி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்ற இருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
