Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»ஜெயலலிதா நினைவு தினம் – இபிஎஸ் தலைமையில் அதிமுகவினர் அஞ்சலி
    தமிழ்நாடு

    ஜெயலலிதா நினைவு தினம் – இபிஎஸ் தலைமையில் அதிமுகவினர் அஞ்சலி

    Editor TN TalksBy Editor TN TalksDecember 5, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    js
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் 9ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி இன்று (டிச.5) சென்னை மெரினாவில் உள்ள அவருடைய நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். இவருடன் தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் சென்று மரியாதை செலுத்தினர்.

    அதனைத் தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரின் நினைவிடத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைவரும் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்றனர்.

    அதில், “அதிமுக இயக்கம் இருக்கும் வரை, தமிழர்கள் வாழ்வு வளம்பெற செயல்படும். இந்திய அரசியல் வரலாற்றில் ஈடு இணையில்லா அரசியல் தலைவராக திகழ்ந்த ஜெயலலிதா, துரோகிகள் மற்றும் எதிரிகளின் சூழ்ச்சிகளை வேருடன் அழித்து இரும்பு மங்கையாக வலம்வந்தார். தமிழ்நாட்டை பசியில்லா மாநிலமாக உருவாக்கிட ‘அம்மா உணவகம்’ திறந்தார்.

    அதிமுக ஆட்சியில், கொள்ளை, கொலை, குடும்ப ஆட்சி போன்றவை இல்லை. அதனால் மக்களின் மகிழ்ச்சிக்கும் அளவே இல்லை. அத்தகைய நல் ஆட்சியை மீண்டும் அமைக்க ஓய்வின்றி உழைப்போம் உற்சாகமாக உழைப்போம். பொய்யான வாக்குறுதிகளை தந்து, மக்களை ஏமாற்றிய குடும்ப ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப உறுதியேற்போம்” என்று உறுதிமொழி ஏற்றனர்.

    மேலும், திமுக ஆட்சியின் கொட்டத்தை அடக்க வேண்டும் எனவும், பொம்மை முதல்வரின் பொய் முகத்தை தோலுரித்து காட்டாமல் விடமாட்டோம் என்றும் வாக்குறுதி எடுத்தனர்.

    முன்னதாக எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளப் பக்கத்தில், “அதிமுக தொண்டர்களின் இதயத் துடிப்பில் அன்றும், இன்றும், என்றும் வாழும் எங்கள் இதய தெய்வம், ‘மக்களால் நான்; மக்களுக்காகவே நான்’ என தவ வாழ்விற்காக தன்னை அர்ப்பணித்து, ஒவ்வொரு திட்டத்தையும் தாயுள்ளத்தோடு பார்த்து பார்த்து செய்த ஒப்பற்ற தலைவி.

    நூற்றாண்டு கனவு நோக்கி நம் இயக்கம் பீடுநடை போடுவதற்கு அடித்தளமிட்ட தன்னிகரற்ற ஆளுமை. இன்று வரையிலும், இனியும் எனது ஒவ்வொரு செயலுக்கு பின்னால் இருக்கும் எனது அரசியல் வேத நிலையம். இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மாவை, அவரது 9ஆம் ஆண்டு நினைவு நாளில் போற்றி வணங்குகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிருப்பரங்குன்ற விவகாரம்: வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
    Next Article திமுக-பாஜக இடையே மறைமுக உறவு.. ஜெயக்குமார் விளாசல்
    Editor TN Talks

    Related Posts

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    August 9, 2026

    கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு!. ஆகஸ்ட் 16-க்குள் இதை கட்டாயம் முடிக்க வேண்டும்!

    August 9, 2026

    “தமிழ்நாட்டின் 39 சீட்டில் கைவைத்தால் அவ்ளோதான்!”. டெல்லிக்கு முதல்வர் விஜய் போட்ட மெகா ஸ்கெட்ச்!. அதிர்ச்சியில் பாஜக!

    August 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.