தேர்தல் ஆணையம் நேற்று (மார்ச் 15) தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதியை அறிவித்த நிலையில், முன்னணி ஊடகங்கள் தங்கள் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தொடங்கியுள்ளன. அந்தவகையில் புதிய கருத்து கணிப்பை Times Now செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதில், தமிழகத்தில் திமுகவை முந்தி அதிமுக அதிக இடங்களை கைப்பற்றும் என தெரிய வந்துள்ளது. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 38% வாக்குகளுடன் 104 – 114 இடங்களிலும் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 40% வாக்குகளுடன் 114- 127 இடங்களிலும் விஜய்யின் தவெக 15% வாக்குகளுடன் 1-6 இட்ங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவுகளின்படி பார்த்தால், அதிமுக கூட்டணி பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களைத் தாண்டி ஆட்சியைப் பிடிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
இந்தக் கருத்துக்கணிப்பு முடிவுகள் தமிழகத்தில் ஒரு பெரிய அரசியல் மாற்றத்திற்கான அறிகுறியாகப் பார்க்கப்படுகின்றன. குறிப்பாக, திராவிடக் கட்சிகளுக்கு இடையேயான போட்டியில் அதிமுக முந்துவதும், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுப்பதும் குறிப்பிடத்தக்கது.
திமுக மற்றும் அதிமுக இடையே வெறும் 2% வாக்கு வித்தியாசம் மட்டுமே இருப்பதால், களத்தில் போட்டி மிகவும் கடுமையாக இருக்கும்.
இதேபோல் அசாமில் பாஜக கூட்டணி கட்சிகள் 44% வாக்குகளுடன் 96-98 இடங்களிலும் காங்கிரஸ் கூட்டணி 40% வாக்குகளுடன் 26-28 இடங்களிலும் வெற்றிபெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளத்தில் LDF 43% வாக்குகளுடன் 61-71 இடங்களிலும், UDF 42% வாக்குகளுடன் 58 – 69 இடங்களிலும் வெற்றிபெற வாய்ப்புள்ளது.
மேற்கு வங்கத்தில் TMC – 45% வாக்குகளுடன் 155-170 இடங்களிலும், என்.டி.ஏ. கூட்டணி 43% வாக்குகளுடன் 100-115 இடங்களிலும் வெற்றிபெறும் என்றும் கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
