நகரப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் நாளை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.

தலைமைச் செயலகத்தில் சமூக நலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் மற்றும் வருவாய் துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவ மாணவிகளுக்கு காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டு, கிராமப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. காலை உணவு திட்டத்தின் மூலம் இதுவரை 17,53,257 குழந்தைகள் பயன்பெற்றுள்ளனர்

நாளை காலை முதலமைச்சர் நகர்புறத்தில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார். சென்னை மயிலாப்பூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் இந்த திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளதாகவும் அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிவித்தார்.

5வது முறையாக இந்த திட்டத்தை முதல்வர் விரிவாக்க செய்ய உள்ளார். இந்த திட்டம் பொதுமக்கள், குழந்தைகள், ஆசிரியர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இத்திட்டம் மூலம் மாணவர்களின் பள்ளி வருகை அதிகரித்துள்ளது. காலை உணவு திட்டத்தால் , மாணவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது. தானியம் மற்றும் காய்கறிகளுடன் உணவு வழங்கப்படுவதால் மாணவர்களின் ஆரோக்கியம் அதிகரித்துள்ளது. குழந்தைகள் நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக் கொண்டுள்ளனர். குறிப்பாக கை கழுவும் பழக்கம் அதிகரித்துள்ளது

2429 பள்ளிகளில் நாளை திட்டம் தொடங்கப்பட உள்ளது. 88% மாணவர்கள் இந்த உணவை எடுத்துக்கொள்கின்றனர். கிராம புறங்களில் 90% மாணவர்கள் இந்த உணவை உட்கொள்கின்றனர். நாளை தொடங்கும் திட்டம் மூலம் சுமார் 3 லட்சம் மாணவர்கள் பயன்பெற உள்ளனர்

தனியார் பள்ளிகளிலும் காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்வது தொடர்பாக அரசு கொள்கை முடிவு எடுத்தால் அதை அடிப்படையாகக் கொண்டு செயல்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version