சென்னை கலைவாணர் அரங்கில் பன்னாட்டு புத்தகக்கண்காட்சி நடைபெற உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழக பள்​ளிக்​கல்​வித் துறை சார்​பில் பன்​னாட்டு புத்தகக் காட்சி சென்​னை​யில் 2023-ம் ஆண்டு முதல் நடத்​தப்​பட்டு வரு​கிறது. அந்தவகையில் தொடர்ந்து 4-வது ஆண்​டாக பன்​னாட்டு புத்தகக் காட்சி-2026 சென்னை கலை​வாணர் அரங்​கத்​தில் ஜன.16 முதல் 18-ம் தேதி வரை நடத்​தப்பட உள்ளது. இதற்​கான இலச்​சினையை அமைச்​சர் அன்​பில் மகேஸ் சென்​னை​யில் நேற்று வெளி​யிட்​டார். இந்​நிகழ்​வில் பள்​ளிக் கல்​வித் துறை செயலர் பி.சந்​தரமோகன், இயக்​குநர் ச.கண்​ணப்​பன், பொது நூல​கத் துறை இயக்​குநர் ச.ஜெயந்​தி, தொடக்கக் கல்வி இயக்​குநர் பூ.ஆ. நரேஷ் உட்பட பலர் கலந்​து​கொண்டனர்.

இது தமிழகத்​தின் சர்​வ​தேச இலக்​கிய பரி​மாற்​றத்​தில் ஒரு புதிய அத்​தி​யா​யத்தை உரு​வாக்​கும். உலகின் 100 நாடு​களின் பங்​கேற்பு மற்​றும் நூற்​றுக்​கும் மேற்​பட்ட மொழிகளில் தமிழ் எழுத்​தாளர்​களின் படைப்​பு​கள் மொழிபெயர்க்​கப்​படு​தல் போன்ற இலக்​கு​களை எட்​டும் முயற்​சி​யாக இந்​தக் கண்​காட்சி அமை​கிறது.

தமிழ் இலக்​கி​யத்தை சர்​வ​தேச அரங்​கில் நிலைப்​படுத்​து​வதே இந்த கண்​காட்​சி​யின் நோக்​க​மாகும். வரும் ஆண்​டு​களில் அதி​கள​வில் நாடு​கள் பங்​கேற்​கும்​போது தமிழகத்​தின் 2-ம் நிலை நகரங்​களில் கண்​காட்​சியை நடத்​த​வும் ஆலோ​சிப்​போம். நடப்​பாண்​டில் 120-க்​கும் மேற்​பட்ட புத்​தகங்​கள் இந்த கண்​காட்​சி​யில் வெளி​யிடப்பட உள்​ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version