வடக்கு மண்டல ஐஜியாக இருந்த அஸ்ரா கார்க் உளவுப்பிரிவு ஐஜியாக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, காவல்துறை மற்றும் நிர்வாக ரீதியாகப் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, தமிழக காவல்துறையின் மிக முக்கியமான பிரிவான உளவுத்துறை (Intelligence Bureau) ஐ.ஜி-யாக மூத்த ஐபிஎஸ் அதிகாரி அஸ்ரா கார்க் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கரூர் துயர வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வு குழுவுக்கு தலைமை தாங்கினார்.

அதாவது, இதுவரை வடக்கு மண்டல ஐ.ஜி-யாகப் பணியாற்றி வந்த அஸ்ரா கார்க், ஐபிஎஸ், தற்போது தமிழக உளவுத்துறை ஐ.ஜி-யாக மாற்றப்பட்டுள்ளார். முன்னதாக தேர்தல் ஆணையத்தால் உளவுத்துறை ஐ.ஜி-யாக நியமிக்கப்பட்டிருந்த அவினாஷ் குமார், ஐபிஎஸ் தற்போது அந்தப் பொறுப்பிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதாவது, தேர்தல் விதிகள் நடைமுறையில் இருந்த போதும் அப்பதவியில் இருந்த செந்தில் நாதன் மாற்றப்பட்டு அவினாஷ் குமார் பொறுப்பேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version