Close Menu
    What's Hot

    போன உசுரு திரும்ப வருமா..?? இதெல்லாம் வேணாம்..!! அரசு சலுகைகளை நிராகரித்த சபரிவர்மன் குடும்பத்தினர்!

    வெளியானது நீட் மறுதேர்வு முடிவுகள்..!! பஞ்சாப் – ஹரியானா மாணவர்கள் முதலிடம்..!!

    பழனி கோவில் நில விவகாரத்தில் அதிரடி: 3 பேர் கொண்ட உயர்மட்ட குழு அமைப்பு..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»ராணிப்பேட்டை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் முதியவர் மீது தாக்குதல்… காவல்துறை விளக்கம் என்ன?
    தமிழ்நாடு

    ராணிப்பேட்டை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் முதியவர் மீது தாக்குதல்… காவல்துறை விளக்கம் என்ன?

    Editor TN TalksBy Editor TN TalksSeptember 4, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    5
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ராணிப்பேட்டையில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் முதியவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறை விளக்கமளித்துள்ளது.

    ராணிப்பேட்டை மாவட்டம் சாத்தூர் ஊராட்சியில் நேற்று நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு அளிக்க வந்த முதியவரை போலீசார் தாக்கியதாக வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. போலீசாருக்கு எதிராக அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில்,

    காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த முகாமில் கலந்து கொண்ட சாத்தூர் கிராம நிர்வாக அலுவலரிடம் சாத்தூர் கிராமத்தை சேர்ந்த வெங்கடபதி (வ/65) என்பவர் மனு சம்மந்தமாக வாக்குவாதம் செய்து திடீரென கிராம நிர்வாக அலுவலரை கையால் தாக்கியதுடன், அரசு பணியை மேற்கொள்ள விடாமல் தடுத்ததும் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பான காணொளி பொது வெளியில் பகிரப்பட்டுள்ளது.

    இது சம்பந்தமாக அங்கு பணியிலிருந்த உதவி ஆய்வாளர் பிரபாகரன் என்பவர் பிரச்சினை மேலும் தீவிரமடையாமல் தடுக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டார். இதன் தொடர்ச்சியாக அவரை வெளியேற்றும் நோக்கில் உதவி ஆய்வாளர் குறைந்த அளவு பலத்தை பயன்படுத்தி சம்பவம் இடத்திலிருந்த அரசு அழியரை பணி செய்ய விடாமல் தடுத்த வெங்கடபதியை அமைதிப்படுத்தி அனுப்பியதாக தெரியவருகிறது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இச்சம்பவத்தின் முழு காணொளியிலிருந்து, உதவி ஆய்வாளர் மற்றும் வெங்கடபதிக்கு இடையிலான நிகழ்வின் ஒரு பகுதியை மட்டுமே சமூக ஊடகங்களில் மிகைப்படுத்தி பரப்பி வருகின்றனர். பொதுமக்கள் இவ்வாறு பரப்பப்படும் மிகைப்படுத்தப்பட்ட செய்திகளை நம்ப வேண்டாம்” என கேட்டுக் கொள்ளப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநிலை குலைந்துள்ள ஆசிரியர்கள்… அரசு துணை நிற்க வேண்டும்… வைகோ அறிவுறுத்தல்…
    Next Article அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி… நேரில் கண்டு ரசித்த தோனி…
    Editor TN Talks

    Related Posts

    போன உசுரு திரும்ப வருமா..?? இதெல்லாம் வேணாம்..!! அரசு சலுகைகளை நிராகரித்த சபரிவர்மன் குடும்பத்தினர்!

    July 17, 2026

    பழனி கோவில் நில விவகாரத்தில் அதிரடி: 3 பேர் கொண்ட உயர்மட்ட குழு அமைப்பு..!!

    July 17, 2026

    சென்னை: நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த தனியார் பள்ளி பேருந்து! மாணவர்கள் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்ப்பு!

    July 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    போன உசுரு திரும்ப வருமா..?? இதெல்லாம் வேணாம்..!! அரசு சலுகைகளை நிராகரித்த சபரிவர்மன் குடும்பத்தினர்!

    வெளியானது நீட் மறுதேர்வு முடிவுகள்..!! பஞ்சாப் – ஹரியானா மாணவர்கள் முதலிடம்..!!

    பழனி கோவில் நில விவகாரத்தில் அதிரடி: 3 பேர் கொண்ட உயர்மட்ட குழு அமைப்பு..!!

    6வது நாளாக தீவிரமடையும் அமெரிக்க தாக்குதல்.. ஈரான் மீது இடைவிடாத குண்டுவீச்சு!

    ஆந்திராவில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா..!! ஒரே மாதத்தில் 4 உயிரிழப்புகள்..!! அதிர்ச்சி தகவல்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.