விஜய் கட்சி தொடங்குவதற்கு முன்பாகவே, விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ”தளபதி விஜய் பயிலகம்” என்ற இரவு நேர பாட சாலை திட்டம் தொடங்கப்பட்டது. கடந்த 2023-ம் ஆண்டு முதல் 10 மற்றும் 12-ம் வகுப்பில் தொகுதி வாரியாக முதல் 3 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு விஜய் உதவித் தொகை வழங்கி வருகிறார்.

2023-ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் தளபதி விஜய் பயிலகம் தொடங்க, விஜய் மக்கள் இயக்கத்தினர் முடிவெடுத்தனர். அதன்படி தமிழ்நாடு முழுவதும் இரவு நேர பாடசாலை திட்டம் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. அந்த வகையில், வடசென்னை கிழக்கு மாவட்ட ஆர்.கே.நகர் பகுதியில் கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளாக தளபதி பயிலகம் செயல்பட்டு வருகிறது. இன்று(18.06.2025) காலை திமுக நிர்வாகிகள் மற்றும் போலீசார் அந்த பயிலகத்தை மூட முயற்சித்ததாக கூறப்படுகிறது.

திமுக நிர்வாகி ஒருவரின் தூண்டுதலினால் தளபதி பயிலகத்தை மூட முயற்சிப்பதாக தவெக நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ள்ளனர். மேலும் பயிலகத்தை மூட முயற்சித்த போலீசாருடன், தவெக நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Share.
Leave A Reply

Exit mobile version