தோல்வி பயத்தில் ஒன்றிய பா.ஜ.க. அரசு செய்துகொண்டிருக்கும் அட்டூழியத்திற்குத் தமிழ்நாட்டு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் மணிமங்கலத்தில் உள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தினர். மேலும் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள செல்வப்பெருந்தகை வீட்டிலும் வருமான வரித்துறையினர் காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வாக்காளர்களுக்கு விநியோகிக்க செல்வப்பெருந்தகை வீட்டில் பணம் பதுக்கப்பட்டுள்ளதாக புகார் வந்த நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, பிரசாரத்துக்கு செல்ல விடாமல் இந்தி பேசும் வருமான வரித்துறையினர் தன்னை சிறைப்பிடித்துள்ளதாக செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியிருந்தார்.

இந்தநிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில், இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பதை மறந்து, தேர்தல் பிரசாரம் முடிவடைய இன்னும் 48 மணிநேரம் கூட இல்லாத நிலையில், எதிர்க்கட்சியினரை முடக்க, தோல்வி பயத்தில் ஒன்றிய பா.ஜ.க. அரசு செய்துகொண்டிருக்கும் அட்டூழியத்திற்குத் தமிழ்நாட்டு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்” என செல்வப்பெருந்தகை பரப்புரையை முடக்க நினைக்கும் சதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version