தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று காலை பாரதிய ஜனதா கட்சியின் மாநில மையக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை,  வானதி சீனிவாசன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். இதில் தேர்தலில் போட்டியிடும் உத்திகள், சூறாவளிப் பிரச்சாரங்களை முன்னெடுப்பது மற்றும் கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு மற்றும் களப்பணிகளை ஒருங்கிணைப்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, தமிழகத்தில் போட்டியிடவுள்ள பாஜக வேட்பாளர்கள் பிரதமர் மோடியைச் சந்தித்து நேரில் வாழ்த்து பெறுகின்றனர். ஏற்கனவே 27 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக தலைமை வெளியிட்டுள்ள நிலையில்,   பிரதமரின் இந்த வருகை தமிழக பாஜகவினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version