மிழக அரசியல் சூழல் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. இந்நிலையில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் மேற்கொள்ளும் அரசியல் நடவடிக்கைகள் மாநிலம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளன. அவரின் தேர்தல் தயாரிப்பில் ஏற்பட்ட சமீபத் தகவல் பலரின் கவனத்தையும் மையப்படுத்தியுள்ளது.

தமிழக வெற்றி கழகத்திற்கு புதிய தேர்தல் சின்னம்: திமுகவுக்கு எதிரான வியூகங்களை தீட்டி வரும் விஜய், தனது கட்சியின் பிரச்சாரத்தை ஏற்கனவே துவங்கியுள்ளார். இதைத் தொடர்ந்து, கட்சிக்கு தேர்தல் ஆணையம் எந்த சின்னத்தை ஒதுக்கப் போகிறது என்பது குறித்து அதிக ஆர்வம் காணப்பட்டது.

விசில், பேட், பூமி உருண்டை, மோதிரம் மற்றும் ஆட்டோ உள்ளிட்ட சின்னங்களைத் தேர்வு செய்யும் முன்மனுவை தமிழக வெற்றி கழகம் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்தது. இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னதாக, அக்கட்சிக்கு மோதிரம் சின்னம் ஒதுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதுகுறித்து விரைவில் விஜய் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட உள்ளார் என்றும் கூறப்பட்டது. இருப்பினும், சில நாட்களுக்கு முன்பு அருமையான சின்னம் நமக்கு கிடைச்சிருக்கு, ஆனால் இப்போது சொல்லமாட்டோம் என்றும் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், புது தகவலாக, 2026 தேர்தலில் தவெகவிற்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. விஜய்க்கு இந்த சின்னத்தை தேர்வு செய்ய சொன்னது அவரின் ஆஸ்தான ஜோசியர் என்று கூறப்படுகிறது. பொதுச் சின்னங்கள் முதலில் வருபவருக்கே முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version