சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் 27 தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் இம்முறை ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 28 தொகுதிகள் பட்டியலையும் திமுக தலைமை கடந்த மார்ச் 28 ஆம் தேதியே அறிவித்துவிட்டது.

திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவித்து, பல கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து வரும் நிலையில், காங்கிரஸ் இன்னும் வேட்பாளர்களை அறிவிக்காமல் இருந்தது. வேட்பு மனு தாக்கள் தொடங்கி 4 நாட்கள் ஆகும் நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில்  இழுபறி நீடித்து வந்தது, இந்தநிலையில் வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் – செல்வப்பெருந்தகை

பொன்னேரி – துரை சந்திரசேகர்

வேளச்சேரி – ஹசன் மௌலானா

சோளிங்கர் – முனி ரத்னம்

ஊத்தங்கரை – குப்புசாமி

கிருஷ்ணகிரி – செல்வகுமார்

பென்னாகரம் – ஜி.கே.எம்.தமிழ்குமரன்

ஆத்தூர் – அர்த்தநாரி

ஈரோடு கிழக்கு – கோபிநாத் பழனியப்பன்

உதகமண்டலம் – ராமச்சந்திரன்

கவுண்டம்பாளையம் – சூர்ய பிரகாஷ்

சிங்காநல்லூர் – ஸ்ரீநிதி நாயுடு

துறையூர் – விச்சு லெனின் பிரசாத்

கடலூர் – சந்திரசேகரன்

மயிலாடுதுறை – ஜமால் யூனுஸ் முகமது

அறந்தாங்கி – ராமச்சந்திரன்

காரைக்குடி – மாங்குடி

உசிலம்பட்டி – சரவணகுமார்

சிவகாசி  – கணேசன் அசோகன்

திருவாடானை – ராம கருமாணிக்கம்

ஸ்ரீவைகுண்டம் – ஊர்வசி அமிர்தராஜ்

சங்கரன் கோவில் – சங்கை கணேசன்

அம்பாசமுத்திரம் – துரை

நாங்குநேரி – ரூபி மனோகரன்

குளச்சல் – தாரகை கத்பர்ட்

விளவங்கோடு – டிடி.பிரவீன்

கிள்ளியூர் – ராஜேஸ்குமார் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர் . மேலூர் தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version