அசாம் மாநிலத்தில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சிவசாகர் மாவட்டத்திற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அவருடன் அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மாவும் இணைந்து பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.

வெள்ளப் பாதிப்பால் ஏற்பட்ட சேதங்களை ஆய்வு செய்த அமைச்சர் ஜே.பி. நட்டா, இயற்கை பேரிடரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததுடன், அவர்களுக்கு ஆறுதலும் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜே.பி. நட்டா, “பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசும், அசாம் மாநில அரசும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்துடனும் உறுதுணையாக நிற்கின்றன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் தொடர்ந்து வழங்கப்படும்” என்று உறுதியளித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version