இந்தாண்டு நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலன தவெக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. இந்த நிலையில் தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் பல்வேறு விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். அந்த வகையில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்த பட்ஜெட் வெற்று அறிக்கை என விமர்சனம் செய்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ”மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் ஆக்கப்பூர்வத் திட்டங்களோ, மாநிலத்தின் நிதிச்சுமையைக் குறைக்கும் மாற்றுப்பொருளாதாரப் பெருக்கத்திற்கான நடவடிக்கைகளோ எதுவுமற்று, வெற்றி எனும் பெயரை மட்டுமே கொண்டுள்ள வெற்று அறிக்கைதான் தவெக அரசின் நிதிநிலை அறிக்கை”! என பதிவிட்டுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version