காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற ராஜா முத்துப்பாண்டிக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகையினை முதலமைச்சர் ஜோசப் விஜய் வழங்கினார்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள்–2026-இல், ஆண்களுக்கான 65 கிலோ எடைப்பிரிவு பளுதூக்கும் போட்டியில் தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார். இதையடுத்து அவருக்கு தமிழக அரசு தரப்பில் ரூ.30 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (ஆகஸ்ட் 5) நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் ஜோசப் விஜய், வெள்ளி வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு ரூ.30 லட்சம் மதிப்பிலான ஊக்கத்தொகைக்கான காசோலையை வழங்கி பாராட்டினார்.
சர்வதேச அளவில் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த வீரர்களை ஊக்குவிக்கும் வகையில், மாநில அரசு இந்த உயரிய ஊக்கத்தொகையை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

