சென்னை தண்டையார்பேட்டையில் ஜெயவாணி ஐஸ் யூனிட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஐஸ்கிரீம், குல்பி, குளிர்பானங்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு மொத்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஜெயவாணி நிறுவனத்தின் உரிமையாளர் சந்திரசேகர். இவருக்கு தாரகைஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகள், ஒரு மகன் இருந்தனர். மகள் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.
இவரது மகன் பிரகலாத்(34) நரசிம்மன், தொழிலில் தந்தையைப் போல் சாதிக்க முடியவில்லை என்பதால் நிறைய அவமானங்கள் மற்றும் ஏமாற்றத்தை சந்தித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த பிரகலாஷ் நரசிம்மன், தாய் பாதுகாப்பிற்காக வைத்திருந்த உரிமம் பெற்ற ஸ்போர்ட் வகை துப்பாக்கியால் நெஞ்சில் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் மற்றும் உதவி ஆணையர் ஆகியோர் விசாரணை ஈடுபட்டனர்.