காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் 41வது கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. காவிரி நீர் மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் காணொளி காட்சி மூலம் கூட்டம் நடைபெற்து.
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு,கர்நாடக,கேரளா,புதுச்சேரி மாநில அதிகாரிகள் காணொளி மூலம் கலந்து கொண்டுள்ளனர். காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை பொழிவு நல்ல நிலையில் உள்ளதால் தமிழகத்துக்கு தர வேண்டிய நீரை குறைவில்லாமல் திறந்து விட வேண்டும் என தமிழகம் தெரிவித்தது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி காவிரியில் இருந்து தமிழகத்திற்கு ஜூலை மாதத்தில் தர வேண்டிய 31.24 டி.எம்.சி நீரை கர்நாடகா தங்குதடையின்றி திறந்து விட வேண்டும் என கோரிக்கை விடுத்தது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரியிலிருந்து தமிழகத்திற்கு ஜூலை மாதத்தில் தர வேண்டிய தண்ணீரை திறந்து விட கர்நாடகாவுக்கு கூட்டத்தில் உத்தரவிடப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு குழுவின் 117 வது கூட்டத்தில் நான் உத்தரவிட்டிருந்தது.