Close Menu
    What's Hot

    வாட்ஸ்அப்பில் புதிய ‘Username’ வசதி… புதிய மோசடிகளுக்கான ஆயுதமா?

    பாடப்புத்தகத்தில் ஐஸ்வர்யா ராய் பாட்டு! ஒடிசாவில் பெரும் சர்ச்சை!

    இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம்!. 8 தீவிரவாதிகள் கைது!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை: வடமாநில இளைஞர் கைது
    தமிழ்நாடு

    சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை: வடமாநில இளைஞர் கைது

    Editor TN TalksBy Editor TN TalksJune 27, 2025Updated:June 27, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IMG 20250627 WA0004
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னை ஐஐடி (IIT) வளாகத்தில் படிக்கும் 20 வயது மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ரோஷன் குமார் (22) என்ற வடமாநில இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஐஐடி வளாகத்தில் உள்ள ஒரு உணவகத்தில் வேலை செய்து வந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    நேற்று இரவு 7:30 மணியளவில் மாணவி தனியாக நடந்து வந்துகொண்டிருந்தபோது, ரோஷன் குமார் கையில் கட்டையுடன் வந்துள்ளார். அவர் மாணவியின் முடியைப் பிடித்து இழுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. மாணவி சத்தமிடவே, ரோஷன் குமார் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

    இந்த சம்பவம் குறித்து மாணவி ஐஐடி காவலாளிகளிடம் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து, கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில், இந்த பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர் ஐஐடி வளாகத்தில் உள்ள “மும்பை சாட்” (Mumbai Chaat) என்ற கடையில் பணிபுரிந்து வந்த ரோஷன் குமார் என்பது தெரியவந்தது. நேற்று உடல்நிலை சரியில்லை எனக் கூறி விடுப்பு எடுத்திருந்த ரோஷன், இரவு நேரத்தில் தனியாக வந்த மாணவியைத் தாக்கி பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உறுதியானது.

    இதையடுத்து, ரோஷன் குமாரை கோட்டூர்புரம் காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    arrest Chennai Crime IIT Kotturpuram Safety Sexual Harassment student குற்றம் கைது கோட்டூர்புரம் சென்னை பாதுகாப்பு பாலியல் தொல்லை மாணவி
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமு.க.ஸ்டாலின் விழாவில் விஜய் படத்தை காண்பித்த மாணவர்கள்…
    Next Article கர்நாடகத்திற்கு காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு.. தமிழகத்திற்கு ஜுலைக்கு உரிய நீரை திறந்து விட வேண்டும்..
    Editor TN Talks

    Related Posts

    வாட்ஸ்அப்பில் புதிய ‘Username’ வசதி… புதிய மோசடிகளுக்கான ஆயுதமா?

    July 3, 2026

    பாடப்புத்தகத்தில் ஐஸ்வர்யா ராய் பாட்டு! ஒடிசாவில் பெரும் சர்ச்சை!

    July 3, 2026

    இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம்!. 8 தீவிரவாதிகள் கைது!

    July 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வாட்ஸ்அப்பில் புதிய ‘Username’ வசதி… புதிய மோசடிகளுக்கான ஆயுதமா?

    பாடப்புத்தகத்தில் ஐஸ்வர்யா ராய் பாட்டு! ஒடிசாவில் பெரும் சர்ச்சை!

    இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம்!. 8 தீவிரவாதிகள் கைது!

    “தவெக-வில் சேர வற்புறுத்தினார்கள்” – அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!

    இன்ஸ்டாகிராமில் ஆபாச விளம்பரங்கள்!. மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.