மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று முதல் ஜூலை 3-ம் தேதி வரை தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இன்று (ஜூன் 28) காலை 10 மணி வரை 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் புதிய தகவலை வெளியிட்டுள்ளது. இதன்படி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

பயணிகளும் பொதுமக்களும் வானிலை நிலவரத்தை கருத்தில் கொண்டு தங்கள் பயண திட்டங்களை அமைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Share.
Leave A Reply

Exit mobile version