அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் கோவையில் பேசியவர்,
இந்து சமய அறநிலைத்துறை நிதியிலிருந்து கல்லூரிகள் கட்டுவது குறித்து விமர்சனம் செய்திருந்தார். இதற்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் எடப்பாடி பழனிச்சாமி கருத்தை கண்டிக்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆர்எஸ்எஸ் உடை அணிவித்தது மாதிரியான புகைப்படங்களை கையில் வைத்து மாணவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாணவர்கள், எடப்பாடி பழனிச்சாமியின் கருத்தை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது இந்து சமய அறநிலை துறை சார்பாக கல்லூரிகள் கட்டுவது சிறப்பான ஒன்று. பாஜகவின் அடிமையாகவே எடப்பாடி பழனிச்சாமி மாறி இந்த கருத்தை அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மன்னிப்பு கூற வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அவர்கள் கட்சியில் இருக்கும் அண்ணா திராவிடம் போன்ற சொல்களை எடுத்து விட வேண்டும் பின்பு இந்த மாதிரியான கருத்துக்களை எடப்பாடி பழனிச்சாமி தாராளமாக பேசிக் கொள்ளலாம் என்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version