சேலம் மேற்கு தொகுதி வேட்பாளரும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான அருளை ஆதரித்து சட்டசபை தேர்தலுக்கான முதல் பரப்புரையை ராமதாஸ் நேற்று மேற்கொண்டார். சேலம் பள்ளப்பட்டியில் பரப்புரையை முடித்து மேடையில் இருந்து இறங்கியபோது திடீரென அவர் மயக்கமடைந்தார். உடனடியாக, ராமதாஸின் மகள் ஸ்ரீகாந்தி உள்ளிட்டோர் ஐந்து ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரை காரில் அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து ராமதாஸ் மற்றொரு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

சேலத்தில் நேற்று தேர்தல் பரப்புரை முடிந்து மேடையிலிருந்து இறங்கிய பாமக நிறுவனர் ராமதாஸ் திடீரென மயக்கமடைந்தார். உடனடியாக அவர் ஆம்புலன்ஸ் மூலம் ஐந்து ரோடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ரத்த அழுத்தக் குறைவால் மயக்கமடைந்த அவருக்கு அங்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது.

வயது மூப்பு காரணமாகவே ராமதாசுக்கு மயக்கம் ஏற்பட்டதாகவும், தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ராமதாசிடம் தொலைபேசியில் பேசி முதல்வர் ஸ்டாலின் நலம் விசாரித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version